Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது!
Rahu Ketu Nakshatra Transit On 29 March 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர்கள் ராகு, கேது. இந்த கிரகங்கள் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பர். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்கள். ஆனால் இந்த கிரகங்களுக்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை.
இவை இரண்டும் எதிர்பாராத நிகழ்வுகள், திடீர் மாற்றங்கள், மாயைகளின் காரணியாக கருதப்படுகின்றன. பொதுவாக ராகு, கேது என்றாலே மோசமான பலன்களைத் தரக்கூடியவர்களாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இவ்விரு கிரகங்களும் ஒருவரது மோசமான தலைவிதியையும் சிறப்பானதாக மாற்றும் ஆற்றல் உண்டு.

தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு கிரகங்களும் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளனர். அதுவும் இந்த பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது ராகு சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும், கேது மகம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர்.
இந்த கிரகங்களின் நட்சத்திர மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை காண்பார்கள். முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். செலவுகள் குறையும். இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். திடீர் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சாதகமான சூழல் உருவாகும். தொழிலில் இந்த மந்தம் நீங்கி, நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். கடன் தொல்லை நீங்கும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். கடன் பிரச்சனைகள் குறையும். வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். காதலித்து வந்தால், அந்த காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



