Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
Rahu Ketu Make Kaal Sarpa Yog 2026: ஜோதிடத்தின் படி மார்ச் மாதமானது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பல முக்கிய கிரகங்களின் நிலைகளால் ஏராளமான யோகங்கள் உருவாகின்றன. முக்கியமாக ராகு மற்றும் கேதுவின் நிலைகளால் கால சர்ப்ப யோகம் உருவாகியுள்ளது.
எப்போது ராகு மற்றும் கேதுவிற்கு இடையே அனைத்து கிரகங்களும் வந்து, 180 டிகிரியில் நிலைநிறுத்தப்படுகிறதோ, அப்போது இந்த கால சர்ப்ப யோகம் உருவாகும். இந்த கால சர்ப்ப யோகம் ஒரு தோஷமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் தற்போது கேது சிம்ம ராசியிலும், செவ்வாய், புதன், சூரியன், ராகு ஆகிய கிரகங்கள் கும்ப ராசியிலும், சனி மற்றும் சுக்கிரன் மீன ராசியிலும் உள்ளனர். இந்த கிரகங்களின் நிலைகளால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது ராகு கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கால சர்ப்ப யோகம் எப்படிப்பட்ட பலன்களை அளிக்கும்?
பொதுவாக கால சர்ப்ப யோகத்தை, கால சர்ப்ப தோஷம் என்று சொல்வார்கள். இந்த யோகமானது வாழ்க்கையில் போராட்டங்களை அதிகரிக்கும். மன அமைதியைக் கெடுக்கும். உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.
தொழிலில் பல தடைகளை உண்டாக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே வாக்குவாதங்களை அதிகரிக்கும். துணையுடன் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இருந்தாலும், சில சமயங்களில் சந்திரனின் நிலையைப் பொறுத்து, சிலருக்கு நல்ல பலன்களும் கிடைக்கலாம்.
அந்த வகையில் மார்ச் 26 ம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைவதால், இந்த யோகம் முடிவுக்கு வருகிறது. இப்போது இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கால சர்ப்ப யோகம் சில சிரமங்களைக் கொடுத்தாலும், வாழ்வில் பல நல்ல பலன்களைப் பெறக்கூடும். ஆளுமை மேம்படும். இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். தொழிலில் சில சாதனைகளைப் புரியலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். குருவின் பார்வையால் பேச்சில் சற்று நிதானம் அவசியம். சில நேரங்களில் குடும்ப உறவுகள் பதட்டமாக இருக்கலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
மீனம்
கால சர்ப்ப யோகத்தால் மீன ராசிக்காரர்கள் சற்று பிரச்சனைகளை சந்தித்தாலும், அதை திறம்பட எதிர்கொள்ளும் ஆற்றலும் இருக்கும். அதுவும் மார்ச் 11 முதல் குரு வக்ர நிவர்த்தி அடைவதால், தொழில் மற்றும் படிப்பில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். வெளிநாட்டில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
கால சர்ப்ப யோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் வாழ்வின் சில பகுதிகயில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் இந்த யோக காலத்தில் பல்வேறு சுப யோகங்களும் உருவாவதால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். குறிப்பாக வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். உயர் கல்வி படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான விஷங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். இருப்பினும், பேச்சு மற்றும் எடுக்கும் முடிவுகளில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கால சர்ப்ப யோகத்தால் சந்திக்கும் மோசமான விளைவுகளை குறைக்கும் பரிகாரங்கள்:
* கால சர்ப்ப யோகத்தின் மோசமான விளைவுகளை குறைக்க வேண்டுமானால், சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
* ருத்ரா அபிஷேகம் செய்வதன் மூலம் கால சர்ப்ப யோகத்தின் தீய விளைவுகளைத் தடுக்கலாம்.
* முக்கியமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனுக்கு பால், கருப்பு எள்ளு விதைகள் மற்றும் நீரால் அபிஷேகம் செய்வதால், நல்ல பலன் கிட்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications













