கேது சிம்ம ராசிக்கு சென்றிருப்பதால் அடுத்த 18 மாதம் 12 ராசிகாரர்களுக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

Ketu Transit In Leo 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சனி, குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக கருதப்படுகின்றன.

நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகும். இதில் கேது கேது என்பது கண்ணுக்குத் தெரியாத சக்தி, ஆன்மீகம், மர்மம் ஆகியவற்றை குறிக்கிறது. மேலும் கேது மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பார்.

Ketu Transit In Leo 2025 Effects On 12 Zodiac Signs

இந்த கேது மே 18 ஆம் தேதி தான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சூரியனின் நட்சத்திரத்திற்கு கேது சென்றிருப்பதால், அதன் தாக்கம் தொழில், உறவுகள், ஆரோக்கியம், மன நிலை மற்றும் ஆன்மீக முன்னேற்றம் போன்ற வாழ்க்கையின் பல பகுதிகளைப் பாதிக்கலாம்.

அதுவும் கேது 18 மாதங்களுக்கு சிம்ம ராசியில் பயணிக்கவுள்ளார். இக்காலத்தில் கேதுவின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெவ்வேறு மாதிரி இருக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சில ராசிக்காரர்கள் குழப்பமான மன நிலை, ஆரோக்கிய பிரச்சனைகள், உறவுகளில் சிக்கல் என பல பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.

குறிப்பாக ஜாதகத்தில் கேது மகா தசை நடப்பவர்களுக்கு இந்த கேது பெயர்ச்சியின் தாக்கம் இன்னும் ஆழமாக இருக்கும். இப்போது சிம்ம ராசிக்கு கேது சென்றிருப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல தி ஆதாயங்களையும், சமூகத்தில் கௌரவத்தையும், அரசியல் துறையில் வெற்றியையும் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும் மற்றும் அவரது ஆதரவு முழுமையாக கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்புபவர்களின் ஆசை நிறைவேறும். படைப்பு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் தடைகள், மனக் குழப்பம், தேவையற்ற செலவுகள் மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம். மேலும் வாகனம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடின உழைப்பின் மூலம் வெற்றி கிடைக்கும். கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மற்றும் பேச்சு பாதிக்கப்படலாம். அதாவது இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் அதிகரிக்கும் அல்லது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் கடுமையான பேச்சு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் கேது இந்த ராசிக்காரர்களை அதிகம் போராட வைப்பார். ஆனால் இறுதியில் வெற்றி அடைய வைப்பார். பணப் பற்றாக்குறை, குடும்ப இடைவெளி மற்றும் நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நம்பிக்கையுடன் கேதுவை வணங்கி வந்தால், மோசமான விளைவைக் கட்டுப்படுத்தலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணத்தை சந்திக்க நேரிடும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். எதிலும் பிடிவாதமாக இருப்பது, தீங்கை விளைவிக்கும். எனவே பொறுமை அவசியம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். ராகுவால் ஏற்படும் தடைகளும் குறையும். வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். புத்திசாலித்தனம் காரணமாக சாத்தியமற்ற வேலைகள் கூட வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். ஆனால் நீங்கள் அவற்றைச் சிறப்பாகச் செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் அல்லது புனித யாத்திரை செல்லும் வாய்ப்புக்கள் உங்களுக்கு கிடைக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வு, வருமானத்தில் தேக்கம், அதிகப்படியான கோபம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வருமானமும் சிறப்பாக இருக்கும். பொறுமை மற்றும் விவேகத்துடன் செயல்பட்டால் சவால்களை எளிதில் வெல்லலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். ராகுவால் ஏற்பட்ட தொல்லைகளிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளை சிறப்பாக வென்று வீழ்த்துவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். தேவைப்பட்ட அரசாங்க உதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, May 19, 2025, 23:20 [IST]
Desktop Bottom Promotion