Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது..
Sukra Peyarchi 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதத்திற்கு ஒருமுறை தனது நிலையை மாற்றுவார். மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை ராசியை மாற்றுவார்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அந்த வகையில் சுக்கிரன் கடந்த மார்ச் 03 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார். இதனால் மாளவ்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது. மீன ராசியானது சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாகும்.

இப்படி சுக்கிரன் உச்சம் பெறும் போது, அவர் வழக்கத்தை விட அதிக நன்மைகளை வாரி வழங்குவார். இந்நிலையில் மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். அழகும், கவர்ச்சியும் அதிகரிக்கும். பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசின் அதிபதியான சுக்கிரன் 11 ஆவது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வணிகர்கள் தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை மற்றும் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் தொழில் ரீதியாக நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கலை துறையில் இருப்பவர்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல வரன் கிடைக்கும். காதலித்து வந்தால், குடும்பத்தில் ஒப்புதல் கிடைத்து, திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

