Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்..
Sun Transit In Pisces 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கும் மோசமா இருக்கும்.
அந்த வகையில் தற்போது சூரியன் சனி பகவானின் கும்ப ராசியில் உள்ளார். இந்நிலையில் சூரியன் மார்ச் 15 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சனி பகவானும் உள்ளார். இந்த சூரியனுக்கும், சனி பகவானுக்கும் பகை உணர்வு உள்ளது. இருந்தாலும், இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

அதே வேளையில், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரச்சனைகள் நிறைந்ததாக, சவாலானதாக இருக்கும். இப்போது 1 வருடம் கழித்து மீன ராசியில் நுழையும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
சிம்மம்
மார்ச் மாத சூரிய பெயர்ச்சியின் போது சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் பலவிதமான சவால்களை எதிர்கொள்வார்கள். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். புதிதாக ஏதாவது வேலையை தொடங்க நினைத்தால், இக்காலத்தில் அதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். மிகுந்த உடல் சோர்வை சந்திப்பீர்கள். மனநிலையில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்
மார்ச் மாத சூரிய பெயர்ச்சியின் போது விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். படைப்பாற்றல் குறையும். தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அஜாக்கிரதை பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால் தோல்விகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் பல புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மார்ச் மாத சூரிய பெயர்ச்சியின் போது மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எதிலும் அவசரத்தைக் கைவிட வேண்டும். மனநிலையில் நிறைய குழப்பங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை குறையும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் போட்டிகள் அதிகரிக்கலாம். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பொறுமையை கையாண்டால், நல்ல பலன்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
