Latest Updates
-
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க!
சூரியன் சந்திரனால் உருவாகும் ஆபத்தான யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
Vyatipat Yog On 05 March 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் பல்வேறு சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிகவும் ஆபத்தான ஒரு யோகம் தான் வியாதிபாத யோகம். இந்த யோகமானது கொடிய யோகங்களுள் ஒன்றாகும்.
இப்படிப்பட்ட யோகம் சூரியன், சந்திரனால் உருவாகிறது. அதுவும் சூரியனும், சந்திரனும் 180 டிகிரியில் இருக்கும் போது, அதாவது ஒன்றுக்கொன்று எதிரெதிரியில் இருக்கும் போது அல்லது எதிர் ராசியில் இருக்கும் போது இந்த யோகமானது உருவாகும்.

அப்படி 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாத தொடக்கத்தில், அதுவும் மார்ச் 05 ஆம் தேதி சூரியனும், சந்திரனும் நேருக்கு நேர் சந்தித்து வியாதிபாத யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த அசுப யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது சூரியன் சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
வியாதிபாத யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் மன அமைதி பாழாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமடையும். பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த முதலீடுகளையும் இக்காலத்தில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் பதட்டங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு, தலைவலியால் அவதிப்படலாம். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
வியாதிபாத யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் உறவுகளில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். மோதல்களை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படலாம். இதனால் உங்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக செலவுகள் நிதி நிலையை பாதிக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனைகளால் சிரமப்பட நேரிடும். பயணங்களின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
வியாதிபாத யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரிக்கும். வேலையில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கைக்கு வராது. திடீர் செலவுகள் பட்ஜெட்டை பாதிக்கும். ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். தூக்கமின்மை உங்களை சோர்வடையச் செய்யும். எந்த முடிவுகளை எடுக்கும் முன்பும் கவனமாக ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
