Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிவபெருமான் கோவில்கள் உள்ளன. கோவில்களும் அதன் கட்டமைப்புகளும் மாறினாலும் அதில் ஒரு விஷயம் மட்டும் மாறாது. அதுதான் சிவபெருமானுக்கு முன்னாள் நந்தி இருப்பது. சிவனை வழிபடும்போதெல்லாம் நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை சொல்லும் வழக்கம் அனைவருக்கும் உள்ளது.

சிவபெருமானிடம் நேரடியாக ஆசி பெறாமல், நந்தியின் காதுகளில் வேண்டுதல்களை ரகசியமாகச் சொல்லுமாறு நம் பெரியவர்கள் ஏன் கூறுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? பல நூற்றாண்டுகளாகச் சிவன் கோவில்களில் இந்த தொன்மையான நம்பிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம், தவறாமல் நந்தியின் காதுகளில் தங்கள் வேண்டுதல்களைத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இந்தத் தனித்துவமான நடைமுறைக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? அதற்கானப் பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நந்திபகவான் யார்?
புராணங்களின் படி, சிவபெருமானின் மிகவும் விருப்பமான 'கண'மாக நந்தி கருதப்படுகிறார். சிவபுராணம் மற்றும் சைவ ஆகமங்களின்படி, நந்தி சிவபெருமானின் மிகச்சிறந்த பக்தராக மட்டுமல்லாமல், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக இருப்பிடமான கைலாயத்தின் வாயிற்காவலராகவும் திகழ்கிறார். நந்தியின் அனுமதியின்றி யாராலும் சிவபெருமானை தரிசிக்க முடியாது என்று புராணங்கள் கூறுகிறது. இதனால்தான் பெரும்பாலான கோயில்களில் நந்தி சிவபெருமானை நோக்கியவாறு அமர்ந்திருக்கிறார். அவர் இந்து மதத்தில் தன்னலமற்ற பக்தி, வலிமை, ஞானம் மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார். கோவல்களில் நந்தி அமைந்துள்ள ஸ்தானமானது, சிவபெருமானை அடைந்து அவரது அருளைப் பெற விரும்பினால், முதலில் நந்தியை அணுக வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மக்கள் ஏன் நந்தியின் காதில் தங்கள் வேண்டுதல்களை ரகசியமாகச் சொல்கிறார்கள்?
இந்து மதத்தின்படி, நந்தி 'ஜீவாத்மாவை' (தனிப்பட்ட ஆன்மா) குறிக்கிறது. அதேவேளையில், சிவபெருமான் 'பரமாத்மாவை' (உயரிய ஆன்மா) குறிக்கிறார். சிவபெருமான் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் அவருக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதால், நந்தி ஒரு வாயிற்காவலராக அங்கே நிற்கிறார்.
சிவபுராணத்தின்படி, சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது தேவர்களால் அவரை நேரடியாக அணுக இயலாத சூழலில், நந்திதேவரே அவர்களின் செய்தியை ஈசனுக்கு எடுத்துரைத்தார். அதனால் பக்தர்கள் சிவபெருமானை அணுகுவதற்கான ஒரு தெய்வீகத் தூதராக நந்திதேவர் கருதப்படுகிறார். எனவே, சிவபெருமான் தனது தியானத்திலிருந்து விழித்தெழும்போது நந்திதேவர் தங்கள் வேண்டுதல்களை அவரிடம் சேர்ப்பார் என்று நம்பி, பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நந்திதேவரின் காதில் சத்தமின்றி கூறுகின்றனர். மேலும், பக்தர்களின் வேண்டுதல்களைச் சேர்ப்பதில் நந்திதேவர் எவ்விதப் பாரபட்சமும் காட்டுவதில்லை என்றும், சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானவர் என்பதால் அவரது வார்த்தைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் உள்ளது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆன்மீக முக்கியத்துவம்
நம்பிக்கை: நந்தியின் காதில் உங்கள் செய்தியை மெதுவாகக் கூறுவதன் மூலம், அதை சிவபெருமானிடம் அவர் சேர்ப்பார் என்ற முழு நம்பிக்கையை அவர் மீது வைக்கப்படுகிறது. இது மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியிடம் உங்களை முழுமையாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது.
ஒலி மற்றும் ஆற்றல் பரிமாற்றம்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு பிரார்த்தனை அல்லது மந்திரமும் ஒரு தனித்துவமான அதிர்வைக் கொண்டுள்ளது. உங்கள் விருப்பங்களை நந்தியின் காதில் மெதுவாகக் கூறுவது, அந்த ஆன்மீக ஆற்றலை சிவபெருமானின் தெய்வீக உணர்வுநிலைக்குக் கடத்துவதாக நம்பப்படுகிறது.
மனதளவில் சரணடைதல்: குழப்பங்கள் நிறைந்த உலகில், நந்தி சரணடைதல், அமைதி மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார். அவரது காதில் உங்கள் விருப்பங்களை மெதுவாகக் கூறுவதன் மூலம், உங்கள் மனச்சுமையை இறக்கி வைத்துவிட்டு, இறைவனின் மீது நம்பிக்கையை வைக்கிறீர்கள்.
நந்தியின் காதில் தங்கள் விருப்பங்களை ரகசியமாகச் சொல்வது என்பது வெறும் நம்பிக்கையைத் தாண்டிய ஒரு விஷயமாகும். இது சிவபெருமானிடம் முழுமையான சரணாகதி, பொறுமை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. அடுத்தமுறை சிவபெருமான் கோவிலுக்குச் செல்லும்போது இன்னும் நம்பிக்கையுடன் உங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் சொல்லுங்கள்.



Click it and Unblock the Notifications
