Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Monsoon Skin Care Tips In Tamil: சரும வறட்சி என்பது குளிர்காலத்தில் மட்டுமே சந்திக்கக்கூடிய பிரச்சனை அல்ல. இப்பிரச்சனையை மழைக்காலத்திலும் சந்திக்கக்கூடும். என்ன தான் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமானதாக இருந்தாலும், அதிகப்படியான மழை, வெப்பநிலையில் திடீர் மாற்றங்கள், மிகவும் குளிர்ச்சியான சூழல் மற்றும் அடிக்கடி முகத்தை கழுவுவது போன்றவற்றால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு, அதிக சரும வறட்சியை சந்திக்க நேரிடும்.

இப்படி சந்திக்கும் சரும வறட்சியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின் அந்த வறட்சி அதிகரித்து, சருமத்தின் மென்மைத்தன்மை நீங்கி, சருமமானது நாளடைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடும். இதைத் தவிர்க்க மழைக்காலத்திலும் சருமத்திற்கு தவறாமல் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
அதுவும் நீங்கள் இயற்கை வழியில் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடனும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால் இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுங்கள்.
அதுவும் குறிப்பிட்ட சில இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், சரும பளபளவென்று பிரகாசமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும். இப்போது மழைக்காலத்தில் சரும வறட்சியைத் தடுத்து, சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கற்றாழை ஜெல்
* நல்ல பிரஷ்ஷான கற்றாழை ஜெல்லை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் செய்து வர, சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
2. தேன் ஃபேஸ் மாஸ்க்
* இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர சருமம் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.
3. பால் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் ஈரப்பதத்துடனும், பட்டுப்போன்றும் இருக்கும்.
4. வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
* இதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தில் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் சரும வறட்சியை போக்குவதோடு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும்.
5. கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்
* இதற்கு ஒரு பௌலில் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை இரவு தூங்கும் முன் சருமத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வர, சருமம் வறட்சியின்றி ஈரப்பததோடு இருப்பதுடன், மென்மையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications