Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
உங்க குதிகால் வறண்டு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அப்ப இந்த பேக்கை போடுங்க..
Cracked Heels Remedies In Tamil: பொதுவாக அழகு என்று வரும் போது பலரும் தங்களின் முகத்திற்கு, கைகளுக்கு தான் நிறைய பராமரிப்பைக் கொடுப்பார்கள். கால்களை மறந்துவிடுவார்கள். இப்படி கால்களுக்கு பராமரிப்பு கொடுப்பதை மறப்பதால், குதிகால்களில் அதிக வறட்சியின் காரணமாக வெடிப்புகள் ஏற்பட்டு, கால்கள் பார்க்கவே அசிங்கமாக இருக்கும். உங்களின் குதிகால்களிலும் இப்படி அதிகப்படியான வறட்சியுடன் வெடிப்புகள் அதிகமாக உள்ளதா?

அப்படியானால் அதை சரிசெய்ய ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு குதிகால்களுக்கு ஒரு நேச்சுரல் பேக்கை போடுங்கள். இந்த நேச்சுரல் ஃபூட் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, குதிகால்களில் உள்ள வறட்சியும், வெடிப்பும் நீங்கி, கால்கள் பட்டுப்போன்று மென்மையாகவும், அழகாகவும் மாறும். இப்போது குதிகால் வெடிப்பை சரிசெய்யும் அந்த நேச்சுரல் பேக்குகளைக் காண்போம்.
1. வாழைப்பழம், தேன் மற்றும் எலுமிச்சை பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதை குதிகால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் குதிகால்களை கழுவி, தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு, கால்களில் சாக்ஸை அணிந்து கொள்ள வேண்டும்.
* இந்த ஃபூட் பேக்கை ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வர, குதிகால் வெடிப்பு விரைவில் மறைவதைக் காணலாம்.
2. முள்ளங்கி பேக்
* இந்த பேக்கிற்கு வேக வைத்த ஒரு முள்ளங்கியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குதிகால்களில் தடவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் பாதங்களை கழுவ வேண்டும். பின் கால்களுக்கு சாக்ஸை அணிய வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த குதிகால் வெடிப்பு சரியாகும்.
3. கடலை மாவு, அரிசி மாவு மற்றும் முல்தானி மெட்டி பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, சிறிது பால் ஊற்றி நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை குதிகால்களில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* பிறகு கால்களை துடைத்துவிட்டு, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. ஸ்ட்ராபெர்ரி பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த ஸ்ட்ராபெர்ர்ரியை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, அதை பாதங்களில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவி, துடைத்துவிட்டு மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தி வர ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
5. மஞ்சள் மற்றும் தேன் பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை குதிகால்களில் தடவி 1/2 மணிநேரம் காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் என ஒரு வாரம் பயன்படுத்தி வர குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
