Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Aadi Velli Special Coconut Payasam Recipe In Tamil: ஆடி மாத வெள்ளிக்கிழமை எப்போதுமே மிகவும் சிறப்பான மற்றும் மங்களகரமான நாளாகும். இந்நாளில் பெண்கள் அம்மனுக்கு விரதமிருந்து, சிறப்பு பூஜைகளை செய்து, அம்மனுக்கு பிரசாதங்களை செய்து படைத்து வழிபாடுகளை செய்வார்கள்.

அதில் பெரும்பாலானோர் அம்மனுக்கு ஆடி கும்மாயம், பாயாசம், பொங்கல் என்று இனிப்புக்களை செய்து படைப்பார்கள். அதுவும் பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பாயாசம். இந்த பாயாசம் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த பாயாசத்தை 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.
உங்களுக்கு இந்த தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - சிறிது + 2 கப் + 1 கப்
* வெல்லம் - 3/4 கப்
* ஏலக்காய் - 2
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* பாதாம் - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், ஊற வைத்த பச்சரிசியை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியில் அரைத்த விழுது மற்றும் 2 கப் நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 3/4 கப் பொடித்த வெல்லத்தை எடுத்துக்
கொண்டு, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை
கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வாணலியில் உள்ள அரைத்த அரிசி தேங்காய் விழுதை அடுப்பில்
வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* கலவையானது கெட்டியாகத் தொடங்கியதும், குறைவான தீயில் வைத்துவிட்டு,
பின் அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின் அதில் ஏலக்காயை நன்கு பொடித்து சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு மற்றொரு அடுப்பில் நெய்யை ஊற்றி சூடானதும், முந்திரி,
பாதாம், உலர் திராட்சையை சேர்த்து வறுத்து இறக்கி, கொதித்துக்
கொண்டிருக்கும் பாயாசத்துடன் சேர்த்து கலந்து, 5 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான தேங்காய் பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications
