Latest Updates
-
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Ramzan Eid 2026 Special Dindigul Mutton Biryani Recipe In Tamil: ரம்ஜான் பண்டிகை வரப்போகிறது. ரம்ஜான் பண்டிகை என்றதுமே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது மட்டன் பிரியாணி தான். இந்த ரம்ஜான் பண்டிகை அன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணியை செய்யுங்கள்.
இந்த பிரியாணியில் மசாலா அதிகம் இருக்காது என்பதால், நெஞ்செரிச்சல் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்காது. முக்கியமாக இந்த திண்டுக்கல் மட்டன் பிரியாணி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

உங்களுக்கு இந்த திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* முந்திரி - 20
* கல்பாசி - சிறிய துண்டு
* பிரியாணி இலை - 2
* மராட்டி மொக்கு - 3
* ஜாவித்திரி - சிறிது
* கிராம்பு - 6
* ஏலக்காய் - 6
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - 4 சிறிய துண்டு
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பச்சை மிளகாய் - 5
தாளிப்பதற்கு...
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 100 கிராம்
* அரைத்த வெங்காய விழுது
* இஞ்சி பேஸ்ட் - 50 கிராம்
* பூண்டு பேஸ்ட் - 50 கிராம்
* அரைத்த பவுடர்
* தக்காளி - 3 அல்லது 200 கிராம் (அரைத்தது)
* தயிர் - 150 மிலி
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1/4 கட்டு (பொடியாக நறுக்கியது)
* புதினா - 1/4 கட்டு (பொடியாக நறுக்கியது)
* எலும்பில்லாத மட்டன் - 1 கிலோ
* தண்ணீர் - 1 1/2 லிட்டர்
* சீரக சம்பா அரிசி - 1 கிலோ
* எலுமிச்சை - 1
* நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் முந்திரி, கல்பாசி,
பிரியாணி இலை, மராட்டி மொக்கு, ஜாவித்திரி, கிராம்பு, பட்டை,
ஏலக்காய், அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த மசாலா பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு
மென்மையாக அரைத்து பொடி செய்து, தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை
சேர்த்து நன்கு அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் தக்காளியை தனியாக சேர்த்து அரைத்து, அதையும்
தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் நெய் மற்றும் 100 கிராம் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும்,
அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு லேசாக நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பேஸ்ட் மற்றும் வெங்காய பேஸ்ட்டை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த பவுடரை சேர்த்து ஒருமுறை கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, அத்துடன் மல்லித்
தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட்டு, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து லேசாக
கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள 1 கிலோ எலும்பில்லாத மட்டனை
சேர்த்து, உயர் தீயில் வைத்து நன்கு கிளறி விட்டு, 2 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 லிட்டர் நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து, உயர்
தீயில் வைத்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து தீயைக் குறைத்து, 30-45 நிமிடம் மட்டனை அப்படியே
வேக வைக்க வேண்டும். இப்போது சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை
கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 3/4 மணிநேரம் மட்டன் வெந்ததும், அதில் ஊற வைத்த அரிசியை நீரை
வடிகட்டிவிட்டு சேர்த்து, உயர் தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கிளறி, அரிசியும்,
நீரும் சுண்டி ஓரளவு சம அளவில் வந்ததும், மூடி வைத்து, குறைவான தீயில்
வைத்து, 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து,
பிரியாணியை ஒருமுறை கிளறி, பின் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி
கிளறினால், சுவையான திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications








