Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்..
Curry Leaves Chutney: உலகிலலேயே இளம் பருவத்தினர் மக்கள் தொகையை இந்தியா அதிகம் கொண்டுள்ளது. அதில் இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அதோடு தொடர்புயை இரத்த சோகை. அதுவும் மில்லியன் கணக்கானோர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டினால் வரக்கூடியது. இந்நிலையில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகள் குறைவாக இருக்கும். மேலும் இந்த இரத்த சோகையானது ஃபோலேட், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ போன்றவற்றின் குறைபாட்டினாலும் வரக்கூடும்.

இப்படிப்பட்ட இரத்த சோகையை குணப்படுத்த உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன. அதுவும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது இரத்த சோகையை எதிர்த்து போராடலாம்.
அதுவும் இப்படியான இரும்புச்சத்து குறைபாட்டை போக்க ஒரு ருசியான சட்னி பெரிதும் உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், ஊட்டச்சத்து நிபுணரான ஸ்வேதா ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்கி இரத்த சோகையைத் தடுக்க உதவும் ஒரு அற்புதமான சட்னி குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "சமையலறையில் சக்திவாய்ந்த பல நிவாரண பொருட்கள் உள்ளன. அதற்கு அவற்றை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். அதில் ஒன்று தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையைக் கொண்டு சட்னி தயாரித்து உட்கொள்ளும் போது, அது இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி-யை வழங்குகிறது. அதாவது இது இரும்புச்சத்தை அதிகரித்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்" என்று கூறினார்.
"குறிப்பாக இந்த சட்னியை உட்கொள்ளும் போது, உடல் சோர்வு நீங்கும், தலைமுடி உதிரும், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலில் இரத்தம் ஊறும்" என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறினார். இது தவிர இந்த கறிவேப்பிலை சட்னியை எப்படி தயாரிப்பது, எப்படி உட்கொள்வது என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
சட்னி தயாரிக்க தேவையான பொருட்கள்:
* கறிவேப்பிலை - 1 கப்
* வறுத்த எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 சிறிய துண்டு
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து மொறுமொறுவென்று வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கறிவேப்பிலை, எள்ளு விதைகள், வெல்லம், எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு சட்னி போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி உட்கொள்வது?
* இந்த சட்னியை தினமும் 2 டேபிள் ஸ்பூன் உட்கொண்டு வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* இந்த சட்னி தோசை, இட்லி, ரொட்டி, தால்-சாவல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
* இந்த சட்னியானது இரத்த சோகை உள்ளவர்கள், தலைமுடி உதிர்வை சந்திப்பவர்கள், உடல் சோர்வை கொண்டவர்களுக்கு ஏற்றது.
நினைவில் கொள்ள வேண்டியவை
இந்த கறிவேப்பிலை சட்னியை உட்கொள்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் மற்றும் பின் காபி அல்லது டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது இரும்புச்சத்து உறிஞ்சுதலில் தடையை ஏற்படுத்தும்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடோ அல்லது மிகுந்த உடல் சோர்வோ அல்லது தலைமுடி உதிர்வோ இருந்தால், ஊட்டச்சத்து நிபுணர் கூறிய கறிவேப்பிலை சட்னியை செய்து சாப்பிட்டு, நன்மை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
