Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
கறிவேப்பிலை குழம்பு
தற்போது இளம் வயதிலேயே நரைமுடி வருவதால், அத்தகையவர்கள் கறிவேப்பிலையை அதிகம் உட்கொண்டு வந்தால், நரைமுடி வருவதைத் தடுக்கலாம். அதிலும் கறிவேப்பிலையை சற்று வித்தியாசமாக குழம்பு போல் வைத்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
மேலும் கறிவேப்பிலை குழம்பானது செய்த மறுநாள் சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். குறிப்பாக இதனை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். சரி, இப்போது அந்த கறிவேப்பிலை குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5-7 (நறுக்கியது)
பூண்டு - 10-12 பற்கள் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறு துண்டு
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் கறிவேப்பிலையை நன்கு நீரில் கழுவி, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் புளி சாற்றினை ஊற்றி, அத்துடன் கறிவேப்பிலை பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை (குறைந்தது 15 நிமிடம்) நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் வெல்லம் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு ரெடி!!!
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications
