73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

Tamil Nadu Election 2026: சமீபத்தில் 5 மாநிலத்தின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது மற்றும் மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்குகளைப் பெற பரபரப்பாக தேர்தல் பிரசாரங்களை நடத்த திட்டங்களை போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் பெரும்பாலும் வெற்றி பெறும்.

தற்போது திமுக கட்சியின் தலைவரான மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார். 1953 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதி பிறந்த மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிட அரசியலில் ஒரு ஆளுமையாகத் திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகனாவார். இளமை பருவத்தில் இருந்து திமுக கட்சியின் தீவிர தொண்டராக இருந்து, தீவிரமாக செயல்பட்டு, பல நிர்வாக அனுபவங்களைப் பெற்று படிப்படியாக உயர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக உள்ளார்.

Tamil Nadu Election 2026 5 Morning Fitness Habits of M K Stalin That Keep Him Energetic at 70

73 வயதான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட விஷயங்களை தவறாமல் மேற்கொண்டு வருகிறார். 'இந்தியா டுடே' உடனான ஒரு பிரத்யேக உரையாடலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலின் போது, உடல் ஃபிட்னஸின் முக்கியத்துவம் மற்றும் தனது தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் குறித்து விவாதித்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலான ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது குறித்த வீடியோவை நினைவு கூர்ந்த ஸ்டாலின் அவர்கள், பொது சேவையில் திறம்பட பணியாற்றவும், சுறுசுறுப்பாக செயல்படவும் நல்ல ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

அதோடு ஸ்டாலினின் சுயசரிதையான "உங்களில் ஒருவன்" என்னும் நூல் வெளியீட்டு விழாவிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு:

மு.க.ஸ்டாலின் டயட்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காலையில் எழுந்து பற்களைத் துலக்கியதும், முதலில் 2-3 பேரிச்சம் பழம், 4 ஊற வைத்த பாதாம் பருப்புக்களை உட்கொள்வாராம். அதன்பின் குறைந்தது 1 மணிநேரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வாராம்.

காலை உணவாக 1-2 தோசை அல்லது 2 இட்லி மற்றும் 1 கப் டீ மட்டும் குடிப்பாராம். மதிய உணவின் போது அளவான சாதத்துடன், காய்கறிகள், கீரைகள், பருப்பு போன்றவை கட்டாயம் இருக்குமாம். தவறாமல் ரசம் மற்றும் தயிரை உட்கொள்வாராம். அசைவ உணவுகள் என்றால், அவருக்கு மீன் தான் ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியிருந்தார். இரவு நேரத்தில் இட்லி, இடியாப்பம் போன்ற எளிதில் செரிமானமாகக்கூடிய உணவைகளையே உட்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜிம் பயிற்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வாரத்திற்கு 3 நாட்கள் ஜிம்மில் பயிற்சியாளரின் உதவியுடன் வெயில் லிப்ட்டிங், தோள்களை வலிமையாக்கும் பயிற்சிகள் மற்றும் கார்டியோ பயிற்சிகளை செய்வாராம். அப்படி அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தான் ஒருமுறை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

மன ஆரோக்கியத்திற்கு யோகா

முதலமைச்சராக இருப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பல வழிகளில் இருந்து அழுத்தங்களை சந்திக்க நேரிடும். இதை சமாளித்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சில காலம் யோகா பயிற்றுநர் ஒருவரிடம் யோகா கற்றுக் கொண்டுள்ளாராம். தினமும் குறைந்தது 1/2 மணிநேரமாவது யோகா செய்யாவிட்டால், அந்நாள் முழுவதும் மிகுந்த டென்சனாக இருக்குமாம். எனவே நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், ஒருநிலையில் வேலை செய்ய காலையில் தினமும் யோகா செய்வாராம்.

பிடித்த விளையாட்டுக்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாம். அதுவும் இவருக்கு பள்ளி பருவத்தில் இருந்தே கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ், கால் பந்து போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகமாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த விளையாட்டுக்களை விளையாடுவாராம். முக்கியமாக தினமும் நடைப்பயிற்சிக்கு பிறது சிறிது நேரம் சைக்கிளிங் செய்வது மிகவும் பிடிக்குமாம். இதை நேரம் கிடைக்கும் போது செய்வாராம்.

பொலிவான முகத்திற்கு...

உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க தினசரி யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எண்ணெய் மசாஜ் செய்து குளியல் எடுப்பது, காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உண்பது போன்றவை தான் இவரது முகம் பொலிவோடு இருக்க காரணமாகவும் கூறியுள்ளார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, March 17, 2026, 21:56 [IST]
Desktop Bottom Promotion