Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Health Benefits Of Ragi Roti In Tamil: இந்தியாவில் பரவலாக அரிசி மற்றும் கோதுமை தான் மக்களால் தினமும் உட்கொள்ளப்படும் தானியங்களாகும். அதுவே சிறுதானியங்களை எடுத்துக் கொண்டால், அதில் ராகியை தான் பலரும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். இந்த ராகியை கேழ்வரகு என்றும் அழைப்பர். ராகியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ராகியை ஒருவர் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வயிறும் நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்.
ஏனெனில் ராகியில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இப்படிப்பட்ட ராகியைக் கொண்டு ராகி கூழ், ராகி உப்புமா என்று பல ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டியை தவிர்க்க நினைப்பவர்களுக்கு, ராகி ரொட்டி மிகச்சிறந்த மாற்றாகும். இந்த ராகி ரொட்டி அனைத்து விதமான சைடு டிஷ்களுடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இப்போது கோடைக்காலத்தில் தினமும் ராகி ரொட்டியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம். மேலும் இந்த ராகி ரொட்டியை எப்படி தயாரிப்பது என்பதையும் காண்போம்.
1. எடையை குறைக்க உதவும்
ராகியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் செரிமானம் மெதுவாக நடக்கும். இதன் மூலம் நீண்ட நேரம் வயிறு நிரம்பி, கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். நீங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், தினமும் காலையில் ராகி ரொட்டியை சாப்பிடுங்கள். இதனால் நீண்ட நேரம் உடலில் ஆற்றல் நிலைத்திருக்கும்.
2. எலும்புகள் வலுபெறும்
ராகியில் கால்சியம் வளமான அளவில் உள்ளன. ஆகவே ராகியை தினமும் உணவில் சேர்த்து வரும் போது, சப்ளிமெண்டுகள் ஏதும் இல்லாமல் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது உடல் சோர்வு பிரச்சனையைப் போக்கி, சுறுசுறுப்பாக செயல்பட உதவும். எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தினமும் ராகி ரொட்டியை சாப்பிட, எலும்புகள் இரும்பு போல் வலுவாக இருக்கும்.
3. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
ராகியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவு. அதாவது இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து, அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைத்தால், ராகி ரொட்டியை தினமும் சாப்பிடுங்கள்.
4. செரிமானத்திற்கு நல்லது
ராகி ரொட்டி என்பது ஒரு லேசான உணவு. அதாவது செரிமான மண்டலத்தால் எளிதில் செரிமானமாகக்கூடியது. குறிப்பாக கோடைக்காலத்தில் அல்லது வயிறு சரியில்லாத நேரத்தில் இப்படியான ராகியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆகவே கோடையில் செரிமான பிரச்சனைகள் ஏதும் வரக்கூடாதெனில் ராகி ரொட்டி தினமும் சாப்பிடுங்கள்.
5. உடல் சூடு குறையும்
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைத்தால், அதற்கு சிறந்த தானியம் ராகி தான். ஏனெனில் ராகியில் உடலை குளிர்ச்சியூட்டும் பண்புகள் மற்றும் கால்சியம், இரும்புச்சத்து நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. எனவே கோடையில் நீரிழப்பு, வெப்பப் பக்கவாதம் மற்றும் உடல் சோர்வைத் தடுக்க ராகியை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
ராகி ரொட்டியை தயாரிப்பது எப்படி?
* ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, அதில் சிறிது உப்பு, 1/2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று கைகளாலேயே தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி வைத்துள்ள ராகி ரொட்டியை சேர்த்து, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி ரொட்டி தயார்.
* ராகி ரொட்டியின் சுவையை அதிகரிக்க, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை மாவு பிசையும் போது சேர்த்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













