Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா?
Tamil Nadu Election 2026: 2026 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின் மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. அதுவும் இந்த தேர்தலானது கோடைக்காலத்தில் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல கட்சி தலைவர்கள், வெயிலை பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும்.
இப்படி வெயில் நேரத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போது, உடலை குளிர்ச்சியாகவும், இதமாகவும் வைத்துக் கொள்ள பலவிதமான பானங்கள் உதவுகின்றன. அதில் ஒன்று தான் ஜிகர்தண்டா. இந்த ஜிகர்தண்டா மதுரையில் மிகவும் பிரபலமானது மற்றும் இது சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். சொல்லப்போனால் மற்ற பானங்களை விட, ஜிகர்தண்டா சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

கோடையில் ஏன் ஜிகர்தண்டா சாப்பிட வேண்டும்?
மதுரையில் பிரபலமான ஜிகர்தண்டா ஒரு பால் சார்ந்த குளிர்ச்சி தரும் பானமாகும். இந்த ஜிகர்தண்டா தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும், உடலை குளிர்ச்சியாக்கும் பண்புகளை கொண்டுள்ளன. அதை ஜிகர்தண்டாவை குடிக்கும் போதோ உணர முடியும். மொத்தத்தில் உடல் சூடு பிடிக்காமல் இருக்க வேண்டுமானால், இந்த ஜிகர்தண்டாவை சாப்பிடலாம்.
ஜிகர்தண்டா ஏன் மிகச்சிறந்த கோடைக்கால பானம்?
ஜிகர்தண்டாவில் சேர்க்கப்படும் பாதாம் பிசின் மற்றும் நன்னாரி சிரப் போன்றவை இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டவை. எனவே இது கோடையில் வெப்பத்தைத் தணிக்க உதவும். இந்த பானம் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை அளிப்பதோடு, உடலை நீரேற்றத்துடனும், வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்க உதவும்.
ஜிகர்தண்டா வரலாறு
தமிழ்நாட்டின் மதுரையில் உருவானது தான் ஜிகர்தண்டா. இந்த ஜிகர்தண்டா கடை முதன்முதலாக மதுரையில் உள்ள தெற்கு மாசி வீதி சந்திப்பில் அமனுல்லா மற்றும் அவரது மூன்று சகோதரர்களால் தொடங்கப்பட்டது. கோடைக்காலத்தில் இந்த ஜிகர்தண்டா பானம் மக்களிடையே பிரபலமடைந்து, தற்போது இது மிகச்சிறந்த கோடைக்கால பானமாக திகழ்கிறது.
முக்கியமாக இந்த ஜிகர்தண்டா கடை மதுரையில் மட்டுமின்றி, தற்போது தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் கிளைகள் உள்ளன. எனவே ஜிகர்தண்டா சாப்பிட மதுரைக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஜிகர்தண்டாவில் உள்ள பொருட்கள்
ஜிகர்தண்டாவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுமே மிகவும் தனித்துவமானது. சிறந்த மதுரை ஜிகர்தண்டாவை தயாரிக்க வேண்டுமானால், அவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை சரியாக விகிதத்தில் கலக்க வேண்டும். ஜிகர்தண்டாவில் உள்ள பொருட்கள் பின்வருமாறு:
* பாதாம் பிசின்/பாதாம் கோந்து
* பசும்பால்
* ஜிகர் ஐஸ்க்ரீம்
* நன்னாரி சிரப்
இதில் பாதாம் பிசின் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகள் கொண்ட பொருளாகும். இது தான் கோடையில் இந்த பானத்தை உடலுக்கு குளிர்ச்சியூட்டும் சிறந்த பானமாக்குகிறது. அதற்கு இந்த பாதாம் பிசினை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, பின் பானத்தில் சேர்க்க வேண்டும். மேலும் அத்துடன் ஜிகர் ஐஸ்க்ரீம் மற்றும் சுண்ட காய்ச்சிய பசும்பால் ஒன்று சேரும் போது, ஜிகர்தண்டாவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான கோடைக்கால பானமாகவும் மாற்றுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












