Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: உங்கள் தலைமுடி அதிகமாக உதிர்ந்து எலிவால் போன்று மெலிந்து ஒல்லியாகிக் கொண்டிருக்கிறதா? அதை நினைத்து அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்கள் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? தலைமுடி உதிர்வைத் தடுக்க உதவும் ஏராளமான தலைமுடி பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.

ஆனால் அவை அனைத்துமே அனைவருக்கும் எதிர்பார்த்த பலனைத் தந்துவிடுவதில்லை மற்றும் அனைவராலும் அப்படியான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாது. இந்நிலையில் பலர் இயற்கை வழிகளைத் தான் தேடுவார்கள். நீங்களும் முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் இயற்கை வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நம் வீட்டு சமையலறையிலேயே ஒரு அற்புதமான பொருள் உள்ளது. அது தான் முட்டை.
முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. தலைமுடியின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே இந்த முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடையும் மற்றும் தலைமுடி மெலிவதும் தடுக்கப்படும். இப்போது முடியின் அடர்த்தியை அதிகரிக்க முட்டையை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
1. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியின் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் பேக் தலைமுடிக்கு கூடுதல் பொலிவையும், மென்மையையும் தருவதோடு, தலைமுடியை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
2. முட்டை மற்றும் தயிர் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலையில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் ஸ்கால்ப்பை சுத்தப்படுத்துவதோடு, தலைமுடிக்கு புரோட்டீனை வழங்கி பொலிவோடும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
3. முட்டை மற்றும் தேன் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை தலைமுடியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து மைல்டு ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
4. முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை தலைமுடியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் பேக் தலைமுடியை வலிமையாக்குவதோடு, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
* தலைமுடிக்கு ஹேர் பேக்கை பயன்படுத்தினால், குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும். சூடான நீரால் தலைமுடியை அலசக்கூடாது.
* ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாமே தவிர, தினமும் பயன்படுத்தக்கூடாது.
* ஹேர் பேக்கை தலைக்கு தடவிய பின் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, அனைத்து சத்துக்களும் ஸ்கால்ப்பில் ஊடுருவும்.
* முட்டையை தலைக்கு பயன்படுத்தினால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தவைமுடியை அலச வேண்டும். ஒருவேளை முட்டையின் வாசனை தலைமுடியில் இருந்தால், கடைசியாக சில துளிகள் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்நீரால் தலைமுடியை அலசுங்கள். இதனால் முடியில் முட்டை வாசனை வீசாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
