Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
Papaya Side Effects In Tamil: அனைத்து காலங்களிலும் விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளி ஏராளமான சத்துக்களைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை அதிகமாக உள்ளன. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், பாப்பைன் என்னும் நொதிப் பொருளும் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தை தினமும் ஒரு கப் உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலத்தை மேம்படுத்துவது முதல் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது வரை, உடலுக்கு பல நன்மைள் கிடைக்கும்.

ஆனால் எப்படிப்பட்ட ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சில ஆரோக்கியமான பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி தான் பப்பாளியை சாப்பிடுவதையும் குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனையைக் கொண்டவர்கள் தவிர்க்க வேண்டும். ஒருவேளை சாப்பிட்டால், அது அவர்களின் நிலைமையை மோசமாக்கக்கூடும். இப்போது எந்த ஆரோக்கிய பிரச்சனையைக் கொண்டவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. கர்ப்பிணிகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது என்பதை அனைவரும் அறிவோம். ஏனெனில் பப்பாளியில் அதிக அளவு லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் உள்ளது. இது கருப்பையில் சுருக்கத்தை தூண்டும். இதன் விளைவாக முன்கூட்டிய பிரசவம் அல்லது பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். எனவே தான் கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளியை முற்றிலும் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
2. இதய தாளக் கோளாறுகள் உள்ளவர்கள்
பப்பாளியில் சயனோஜெனிக் என்னும் இயற்கை சேர்மங்கள் உள்ளன. இவை உடலில் மெட்டபாலிச செயல்முறையின் போது ஹைட்ரஜன் சயனைடை வெளியிடும். இது சாதாரண மக்களுக்கு எவ்வித தீங்கையும் விளைவிக்காது. ஆனால் இதய பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. சொல்லப்போனால் இதய தாளக் கோளாறுகள் அல்லது பிற இதய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால், அது இதய தாளத்தை பாதிக்கும். எனவே இவர்கள் தினசரி உணவில் பப்பாளியை சேர்க்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
3. லேடெக்ஸ் அழற்சி உள்ளவர்கள்
லேடெக்ஸ் அழற்சி இருப்பவர்கள், பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பப்பாளியில் உள்ள புரதங்கள் லேடெக்ஸில் காணப்படும் புரதங்களுடன் மிகவும் ஒத்தவை. எனவே இந்நிலையில் பப்பாளியை உட்கொண்டால், அது அரிப்பு, தும்மல் அல்லது சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே இத்தகையவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
4. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்
தைராய்டு பிரச்சனையைக் கொண்டவர்களும் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட சில கூறுகள் தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாட்டை பாதித்து, மிகுந்த உடல் சோர்வு, சோம்பல் மற்றும் குளிர் சகிப்புத்தன்மை போன்ற அறிகுறிகளை இன்னும் அதிகரிக்கும். எனவே தைராய்டு பிரச்சனையைக் கொண்டவர்கள் பப்பாளியை தினசரி உணவில் சேர்க்கும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
5. சிறுநீரக கல் பிரச்சனையை கொண்டவர்கள்
பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. ஆனால் ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனையை கொண்டவர்களுக்கு பப்பாளி தீங்கை விளைவிக்கும். ஏனெனில் இத்தகையவர்கள் பப்பாளியை அதிகம் உட்கொள்ளும் போது, உடலில் வைட்டமின் சி அதிகரித்து, உடலில் ஆக்சலேட்டை உருவாக்கி, கால்சியத்துடன் சேர்ந்து சிறுநீரக கற்களை இன்னும் அதிகரிக்கும். எனவே சிறுநீரக கல் பிரச்சனையை கொண்டவர்கள் பப்பாளியை தொடுவதைத் தவிர்ப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
