கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்

Posted By:

Kerala Style Pattani Masala Recipe in Tamil: சப்பாத்தி, பூரிக்கு எப்போதும் உருளைக்கிழங்கு குருமா செய்து போரடித்து விட்டதா? ஏதாவது புதிய சைடிஷ் செய்ய ஆசைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் வைத்து கேரளா ஸ்டைலில் சூப்பரான பச்சை பட்டாணி குருமாவை செய்யலாம். இந்த கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த குருமா செய்வது மிகவும் சுலபமாகும்.

Kerala Style Pattani Masala Recipe How to Make at Home in Tamil

பட்டாணி புரோட்டின் நிறைந்ததாக இருப்பதால் இது உடலைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இந்த பட்டாணி கிரேவி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் படி அருமையான சுவையில் இருக்கும். பேச்சுலர்களும் இந்த ரெசிபியை ஈஸியாக முயற்சிக்கலாம்

உங்களுக்கு ஈஸியான கேரளா ஸ்டைல் பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுவையான கேரளா பட்டாணி கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 2 கப் பட்டாணி
- 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 2 தக்காளி (நறுக்கியது)
- 2 பல் பூண்டு
- 1 இன்ச் இஞ்சி
- 2 ஸ்பூன் மல்லி விதைகள்
- 5 வர மிளகாய்
- 1 கப் தேங்காய்ப்பால்
- 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- பட்டாணியை இரவே ஊற வைத்து சமைப்பதற்கு முன் வேக வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயைச் சூடாக்கி, அதில் கொத்தமல்லி விதைகளையும், வர மிளகாயையும் பொன்னிறமாகி மணம் வரும் வரை வறுக்கவும். அது ஆறியதும், அதை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.

- வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிய பிறகு, நறுக்கிய தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- தக்காளி நன்கு வெந்து குழைந்து வரும் வரை வதக்கவும். பின்னர் அதை ஆறவைத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- அதே கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும். அது கொதிக்கத் தொடங்கியதும், அதில் அரைத்த பொடியைச் சேர்க்கவும்.

- அனைத்தையும் நன்றாகக் கலந்து, மசாலாவிலிருந்து நல்ல மணம் வரும் வரை சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.

- பின்னர் வேக வைத்து பச்சை பட்டாணி, உப்பு மற்றும் சுமார் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, பட்டாணி மென்மையாகும் வரை வேகவைக்கவும்.

- பட்டாணி வெந்து மென்மையாக மாறியதும், தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். தேங்காய்ப்பாலைச் சேர்த்த பிறகு, தீயைக் மிகக் குறைவாக வைத்து, குழம்பை மெதுவாகக் கொதிக்கவிடவும்.

- குழம்பு தேவையான பதத்திற்கு வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் பட்டாணி மசாலா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, August 7, 2026, 22:44 [IST]
Desktop Bottom Promotion