Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
Shani Mangal Yog 2026: ஜோதிடத்தில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் ஆகஸ்ட் 03 ஆம் தேதி தான் செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் யோகம் ஒன்று உருவாகியுள்ளது. அதுவும் செவ்வாய் மற்றும் சனியின் நிலையால் சனி மங்கள யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகமானது எதிர்மறை பலன்களை அதிகம் தரக்கூடியது. ஏனெனில் சனி செயல், ஒழுக்கம் மற்றும் பொறுமையின் காரணியாக இருக்கும் போது, செவ்வாய் தைரியம், ஆற்றல், கோபம் மற்றும் முடிவெடுக்கும் திறனைக் குறிக்கிறது. இப்படியான இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகியுள்ள யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு, வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அதுமட்டுமின்றி வேலையிலும் திடீரென்று சவால்களை சந்திப்பார்கள். இப்போது செவ்வாய் மற்றும் சனியால் உருவாகியுள்ள சனி மங்கள யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி மங்கள யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் வேலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உறவுகளில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படலாம். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை தொடர்பாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நிதி ஆதாயங்களை விட, உடல் களைப்பு தான் மிஞ்சும்.
கன்னி
சனி மங்கள யோகத்தால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் சிக்கல்கள் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவால் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். ஏதாவது ஒரு பிரச்சனையால் வீட்டு சூழல் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் கனவு நனவாகலாம். இருப்பினும் இக்காலத்தில் உங்களின் பொறுமை சோதிக்கப்படும். புதிய முயற்சிகளில் தடைகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடம் சற்று பொறுமையாக நடக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
சனி மங்கள யோகத்தால் மீன ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். அலட்சியம் பெரிய இழப்புக்களை ஏற்படுத்தக்கூடும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் கூட்டாளருடன் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிட்டு, நிதி இழப்புகளையும் சந்திக்கக்கூடும். ஒரு புதிய வாகனம் வாங்க அல்லது ஒரு பெரிய முதலீடு செய்யத் திட்டமிட்டால், சில தடைகளைச் சந்திக்க நேரிடலாம். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

