Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
Vitamin B12 Deficiency Symptoms In Tamil: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத வைட்டமின் தான் வைட்டமின் பி12. இந்த வைட்டமினை கோபாலமைன் என்றும் அழைப்பர் மற்றும் இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இந்த வைட்டமின் உடலில் பல்வேறு மிகவும் முக்கியமான செயல்பாடுகளான இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், நரம்புகளின் செயல்பாடு மற்றும் டிஎன்ஏ தொகுப்பு போன்றவற்றிற்கு இன்றியமையாததாகும்.

பெரும்பாலும் இந்த வகை வைட்டமின் இறைச்சிகள் மற்றும் பிற செறிவூட்டப்பட்ட உணவுகளிலும் தான் அதிகமாக இருக்கும். எனவே இந்த குறைபாடு சைவ உணவாளர்களிடம் அதிகம் காணப்படும் வாய்ப்புள்ளது. இந்த வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், அது உடல் சோர்வு, இரத்த சோகை மற்றும் மூளையுடன் தொடர்புடைய நரம்பியல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
சொல்லப்போனால் இந்த முக்கியமான வைட்டமின் குறைபாடு ஒருவருக்கு இருந்தால், தினசரி செயல்பாடுகளை கூட மேற்கொள்வது சவாலானதாக இருக்கும். முக்கியமாக இந்த வைட்டமின் குறைபாடு பெரும்பாலும் தினசரி சந்திக்கும் பிரச்சனைகளைப் போன்று இருப்பதால் கண்டறியப்படாமலும் போக வாய்ப்புள்ளது. இப்போது வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் தெரியும் எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
1. உடல் சோர்வு மற்றும் மந்த நிலை
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், அது உடல் சோர்வு அல்லது மிகுந்த உடல் களைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். ஏனெனில் உடலில் வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாமல் போனால், உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் பணியைச் செய்யும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உடல் சிரமப்படும். இதன் விளைவாக உடல் சோர்வு, மந்தநிலை போன்றவற்றை சந்திக்க வைக்கும். எனவே நீங்கள் இப்படி மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. வெளிரிய சருமம்
வைட்டமின் பி12 உடலில் குறைவாக இருந்தால், சருமம் வெளுத்து போய் காணப்படும். இப்படி சருமம் வெளிரிய நிறத்தில் காணப்பட்டால், அது இரத்தசோகை எனப்படும் ஒரு நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இரத்த சோகையானது இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் நிலையாகும். இந்த இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு வைட்டமின் பி12 தேவை. எனவே உங்கள் சருமம் வெளுத்துப் போயிருந்தால், வைட்டமின் பி12 குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது.
3. சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்
நுரையீரல் பிரச்சனை இருந்தால் மட்டும் தான் சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறலை சந்திக்கக்கூடும் என்பதில்லை. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், அது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த வைட்டமின் குறைபாட்டினால் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து, அதன் விளைவாக போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறலை சந்திக்க நேரிடும். அதுவும் இப்படியான மூச்சுத்திணறல் உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது ஓய்வின் போதோ ஏற்படலாம். எனவே இந்நிலையில் கவனமாக இருங்கள்.
4. கை, கால்களில் கூச்ச உணர்வு
கை, கால்களில் கூச்ச உணர்வு, மரத்துப் போதல் அல்லது ஊசியால் குத்துவது போன்ற உணர்வை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் இந்த வைட்டமின் பி12 குறைபாடு நரம்புகளை பாதிப்பதால் இப்படியான அறிகுறியை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அறிகுறியை வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. நடப்பதில் சிரமம்
வைட்டமின் பி12 குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் நடப்பதில் சிரமத்தை சந்திப்பதாக புகாரளித்துள்ளனர். ஆகவே திடீரென்று நடப்பதில் சிரமத்தை சந்தித்தால், அது நரம்பு சேதத்துடன் தொடர்புடையது. இந்த நரம்பு சேதம் வைட்டமின் பி12 குறைபாட்டினால் ஏற்படலாம். எனவே வழக்கத்திற்கு மாறாக நடப்பதில் சிரமத்தை சந்தித்தாலோ, தள்ளாடி நடந்தாலோ அல்லது நடக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ, அது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
6. மனநிலை மாற்றங்கள்
திடீரென்று பதட்டம், எரிச்சல், மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்களை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். மனநிலையை ஒழுங்குபடுத்த உதவும் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியில் இந்த வைட்டமின்12 ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும் போது, அது மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி, மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டை சரிசெய்வது எப்படி?
உடலில் வைட்டமின் பி12 அளவை இயற்கையாகவே அதிகரிக்க பின்வருவனவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவையாவன:
* முட்டைகள், செறிவூட்டப்பட்ட தானியங்கள், மீன், இறைச்சி போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகமாக இருப்பதால், இவற்றை அதிகமாக உட்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.
* பருவ கால பழங்களை தவறாமல் உணவில் சேர்த்து வர வேண்டும்.
* உடலைக் கண்காணித்து, மருத்துவரை அணுகி, தேவையான சத்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications