Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அதில் நாஸ்ட்ராடமஸ் எப்போதும் முதலிடத்தில் இருப்பார். ஏனெனில் உலகை மாற்றிய பல முக்கிய நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. தற்போது பலரும் எதிர்காலத்தை கணிப்பதாகக் கூறப்பட்டாலும் அதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது நாஸ்டராடம்ஸ்தான்.

தற்போது வாழும் நாஸ்ட்ராடமஸ் என்று அழைக்கப்படும் அதோஸ் சலோமே, இந்த ஆண்டிற்கான தனது முக்கிய தீர்க்கதரிசனங்களில் இரண்டு ஏற்கனவே உண்மையாகிவிட்டதாகக் கூறுகிறார். 39 வயதான இந்த பிரேசிலிய தீர்க்கதரிசி, தற்போது மற்றொரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக 'நியூயார்க் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 பரவல் மற்றும் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவு போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்பட்டு பிரபலமடைந்த சலோமே, சமீபத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் பலித்துள்ள சலோமேவின் கணிப்புகள்
அணுசக்தி மேம்பாடு தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மத்திய கிழக்குப் பகுதியில் போர் மூண்டது தான் கூறிய கணிப்புகளில் முதலில் நிறைவேறியது என்று தன்னைத்தானே தீர்க்கதரிசி என்று அழைத்துக்கொள்பவர் கூறினார். அதேவேளையில், 2026 கால்பந்து உலகக் கோப்பை குறித்த அவரது இரண்டாவது தீர்க்கதரிசனமும் உண்மையாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். சாம்பியன் அணி "நெருப்பின் நிறங்களை" அணியும் என்று அவர் முன்பே கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, ஸ்பெயின் வெற்றி பெறும் என்றும் அவர் கணித்திருந்தார்.
கால்பந்து உலகக்கோப்பைப் பற்றுய அவரது கணிப்புப் பற்றி அவர் கூறுகையில், " உலகெங்கிலும் உள்ள பல ஜோதிடர்களும், வர்ணனையாளர்களும் போர்ச்சுகல் அல்லது பிற நாடுகள் கோப்பையை வெல்லும் என்று கணித்துக் கொண்டிருந்த வேளையில், நான் இறுதிப் போட்டியாளர்களை அடையாளம் கண்டு, ஸ்பெயின்தான் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ள நாடு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்," என்று அவர் கூறியுள்ளார்.
சலோமேயின் அடுத்த தீர்க்கதரிசனம் என்ன?
ஆர்க்டிக் வட்டாரத்தில் ரஷ்யாவிற்கும், நேட்டோ (NATO) அமைப்பிற்கும் இடையே ஏற்படக்கூடிய ஒரு பெரும் மோதலே சலோமின் மூன்றாவது கணிப்பு என்று கூறப்படுகிறது. வேகமாக உருகும் துருவப் பனிப்பகுதிகள், அங்குள்ள குறிப்பிடத்தக்க எரிசக்தி வளங்களையும் முக்கியமான கடல் வழித்தடங்களையும் வெளிப்படுத்தும் எனவும், இதனால் உறைந்த வடக்குப் பகுதி ஒரு ஆபத்தான புவிசார் அரசியல் மண்டலமாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இச்சூழ்நிலை தீவிரமடைந்து நேரடி உலகளாவிய மோதலாக மாறக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.
ரஷ்யாவின் நகர்வுகள்
"சமீபத்திய கண்காணிப்புத் தகவல்கள், ரஷ்யா தனது ஏவுகணை அமைப்புகளை ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நகர்த்தி வருவதாகக் கூறுகின்றன" என்று சலோமே ஊடகங்களிடம் தெரிவித்தார். "புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளும் எரிசக்தி வளங்களும் முக்கியப் பங்காற்றக்கூடிய 2026-ஆம் ஆண்டில் பனிக்கட்டி உருகும் சூழலில், நேட்டோ (NATO) படைகளுடன் நேரடி மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கிறது," என்றும் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்கா பற்றிய அதிர்ச்சியளிக்கும் கணிப்பு
ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியில் ஏற்படக்கூடிய மோதல் குறித்தும் சலோமி எச்சரித்துள்ளார். "நைஜரின் வடக்குப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களின் எழுச்சியால், மேற்கத்தியப் படைகள் வெளியேறிய பிறகு தங்கள் செல்வாக்கைப் பாதுகாக்க விரும்பும் நாடுகளுக்கு இடையே மறைமுக மோதல்களுக்கான களமாக அப்பகுதி மாறக்கூடும்" என்று அவர் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
