ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க

Posted By:

Hyderabad Style Kuska Recipe in Tamil: எப்போதும் மதியம் சாம்பார், புளிக்குழம்பு மற்றும் குருமா என்று செய்து போரடித்துவிட்டதா? மதியம் சூப்பரான சமையலை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் கவலையே வேண்டாம். வீடே மணக்கும் அளவில் ஒரு சுவையான ஹைதராபாத் குஸ்காவை செய்யுங்க. புரட்டாசி மாதம் வேறு வந்துவிட்டதால் இந்த குஸ்காவை செய்து சாப்பிடுவது அசைவம் இல்லாத குறையைப் போக்கும்.

Hyderabad Style Kuska Recipe How to Make at Home in Tamil

இந்த ஹைதராபாத் ப்ளைன் குஸ்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். இது ஒன் பாட் ரெசிபி என்பதால் இதை எளிதாக செய்து குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்தனுப்பலாம். இப்படி வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு புரட்டாசி மாத ஸ்பெஷல் ஹைதராபாத் குஸ்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் குஸ்காவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- பாஸ்மதி அரிசி - 2 கப்
- கல்பாசி - சிறிதளவு
- அன்னாசிப் பூ - 1
- சோம்பு - 1 ஸ்பூன்
- ஜாவித்திரி - சிறிதளவு
- கிராம்பு - 4
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- கெட்டித் தயிர் - 1 கப்
- பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - 1/2 கப்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 1/2 கப்
- பிரியாணி மசாலாத் தூள் - 3 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

செய்முறை:

- முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

- ஹைதராபாதி குஸ்காவை செய்ய முதலில், ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் சோம்பு, ஜாதிபத்திரி, நட்சத்திர சோம்பு மற்றும் கல்பாசி ஆகியவற்றைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.

- அதன்பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் லேசான பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.

- பின்னர் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து தக்காளி நன்கு வெந்து குழைந்து வரும் வரை வதக்கவும்.

- தக்காளி வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து ஒருமுறை கிளறவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி மசாலா தூளைச் சேர்க்கவும்.

- மசாலா நன்கு வதங்கி, வெங்காயம் மற்றும் தக்காளியுடன் நன்றாக கலக்கும் வரை வதக்கவும்.

- பின்னர் தயிரைச் சேர்த்து ஒருமுறை கிளறவும். ஊறவைத்த பாஸ்மதி அரிசி மற்றும் 4 கப் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சரிபார்த்து, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை சமைக்கவும்.

- அழுத்தம் தானாக வெளியேறியதும், மூடியைத் திறந்து, லேசாகக் கிளறினால் சுவையான ஹைதராபாத் குஸ்கா ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, September 21, 2026, 21:37 [IST]
Desktop Bottom Promotion