மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்..

Posted By:

Chicken Gravy Recipe In Tamil: தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட தோன்றும். அதுவும் சிக்கன் பிரியர்களாக இருந்தால், நிச்சயம் மழை நேரத்தில் சிக்கனை வாங்கி வந்து சமைத்து சாப்பிடுவார்கள். நீங்களும் அப்படி சிக்கன் பிரியரா? அந்த சிக்கனைக் கொண்டு சப்பாத்திக்கு ஏற்றவாறு ஒரு சுவையான, அதே சமயம் வித்தியாசமான சுவையில் ஒரு கிரேவி செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பக்குவத்தில் சிக்கனைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இப்படி சிக்கன் கிரேவி செய்தால், அது சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

How To Make Restaurant Style Yummy amp amp Delicious Chicken Gravy At Home In 30 Mins

உங்களுக்கு இந்த சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை - பாதி
* தயிர் - 3/4 கப்

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 4
* பூண்டு - 5 பல்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* இஞ்சி - 1 துண்டு
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* ஊற வைத்த சிக்கன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொண்டு, அத்துடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, சிக்கன் மசாலா, மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, பின் ஊற வைத்த சிக்கனை சேர்த்து, அளவாக உப்பு தூவி நன்கு கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 21, 2026, 20:51 [IST]
Desktop Bottom Promotion