புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?

Mercury Transit In Chithirai Nakshatra On 21 September 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் ஒரு ராசியில் 21 நாட்கள் வரை இருப்பார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Mercury Transit In Chithirai Nakshatra On 21 September 2026 List Of Lucky Zodiac Signs

அந்த வகையில் புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி புதன் நட்சத்திரத்தை மாற்றுகிறார். இந்த மாற்றத்தின் போது புதன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் ஆவார்.

இப்படி செவ்வாயின் நட்சத்திரத்திற்குள் புதன் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றம், நிதி நிலையில் நல்ல உயர்வு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறனும், சிந்திக்கும் திறனும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மற்றும் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதவு கிடைக்கும். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும்.

மகரம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இனி கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல பலனைப் பெறலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 21, 2026, 18:37 [IST]
Desktop Bottom Promotion