Latest Updates
-
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Iyengar Avarakkai Poricha Kootu Recipe in Tamil: ஆரோக்கியமாக வாழ காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவரைக்காய் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான காய்கறிகளில் ஒன்றாகும். இதுவரை நீங்கள் அவரைக்காயை வைத்து குழம்பு, பொரியல் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த அவரைக்காயை வைத்து ஐயங்கார் ஸ்டைலில் பொரிச்ச கூட்டு செய்திருக்கிறீர்களா? உண்மைதான், அவரைக்காயை வைத்து ஐயங்கார் ஸ்டைலில் சூப்பரான பொரிச்ச கூட்டு செய்யலாம். இந்த ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் கூட்டு சாம்பார் சாதம், ரசம் சாதம், இட்லி, தோசை என்ன அனைத்திற்கும் சூப்பர் சைடிஷாக இருக்கும்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த அவரைக்காய் பொரிச்ச கூட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் புடலங்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு புடலங்காய் இந்த ஸ்டைலில் கூட்டு செய்து கொடுங்கள். இந்த ஸ்டைலில் செய்தால் அவரைக்காய் பிடிக்காதவர்கள் கூட ஆசையாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் அவரைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அவரைக்காய் - கால் கிலோ
- பாசிப்பருப்பு - கால் கப்
- துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - கால் கப்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில் பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பு நன்கு வேகும் வரை சமைக்கவும்.
- துவரம் பருப்பைத் தனியாக ஒரு பாத்திரத்தில் வேகவைக்கவும்
- நறுக்கிய அவரைக்காய், சிறிது கறிவேப்பிலை மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு வாணலியில் சேர்த்து, காய்கறிகள் பாதி மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் ஊற்றவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வர மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலை இலைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொரகொரப்பாக விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அவரைக்காய் முக்கால்பதத்திற்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- அதன்பின் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் வேகவைத்த துவரம் பருப்பை நன்றாக மசித்து, அதை வாணலியில் சேர்க்கவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் பெருங்காயம் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலையைச் சேர்க்கவும். கறிவேப்பிலை நிறம் மாறியதும் அதை கூட்டில் கொட்டி கிளறி அடுப்பை அணைத்தால் சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் கூட்டு ரெசிபி.



Click it and Unblock the Notifications
