Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
Moon Transit In Capricorn On 21 September 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். கடக ராசியின் அதிபதியான சந்திரன் மனதின் காரணியாக கருதப்படுகிறார். சந்திரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் ஒருவரது மனம் மற்றும் உணர்ச்சிகளில் காணப்படும்.

அந்த வகையில் சந்திரன் செப்டம்பர் 21 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த ராசியில் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை இருப்பார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சந்திரனின் சனி பகவானின் ராசிக்கு சென்றுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வேலையில் அழுத்தம், செலவுகளில் அதிகரிப்பு, மன குழப்பம் போன்றவற்றை சந்திக்கக்கூடும். இப்போது சந்திரன் சனி பகவானின் மகர ராசிக்குள் சென்றுள்ளதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சந்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சிரமங்களை கொண்டு வரும். வாழ்வில் எதிர்பாராத அளவில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். வேலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். பண விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களின் விஷயங்களைப் பற்றி வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உள்ள எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பாராத பல செலவுகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புக்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியத்தை தவிர்த்து, உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். இதன் மூலம் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவதை எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயத்தால் மனதளவில் வருத்தப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
