ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!

Jupiter Rise In Cancer On 10 August 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்வார். இப்படி குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார்.

Jupiter Rise In Cancer On 10 August 2026 These Zodiac Signs Luck Will Shine

இந்நிலையில் குரு பகவான் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். கடக ராசியில் குரு பகவான் இருப்பதால், ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் வலுவடைந்து சில ராசிக்காரர்களுக்கு இருமடங்கு நன்மைகளை வழங்கவுள்ளார். இப்போது குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 10 முதல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குரு பகவானின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, August 7, 2026, 23:50 [IST]
Desktop Bottom Promotion