Latest Updates
-
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Guru Asta 2026: ஜோதிடத்தில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தேவர்களின் குருவாக கருதப்படுகிறார். மேலும் இவர் செல்வம், திருமணம், மரியாதை, மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணியுமாவார். இப்படிப்பட்ட குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 14 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் அஸ்தமிக்கிறார். இந்த நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருப்பார்.

ஜோதிடத்தில் குரு அஸ்தமனமாவது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்நிகழ்வின் போது குரு பகவான் சூரியனுக்கு அருகில் பயணிப்பதால், சற்று பலவீனமாக இருக்கும். குரு பகவானின் இந்நிகழ்வின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது குரு அஸ்தமனமாவதால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்கும் விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் வரை சிறப்பாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். குருவின் அருளால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சிரமங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் கவலைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் பணியிடத்தில் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இதனால் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். செலவுகள் மிதமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். இருப்பினும் ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலகட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். செலவுகள் குறையும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் குரு பகவானின் அருளால் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



