Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...
Bittergourd Thokku Recipe In Tamil: காய்கறிகளுள் பாகற்காய் என்றாலே அனைவரும் தலைதெறிக்க ஓடுவார்கள். இதற்கு அதன் கசப்புத்தன்மை தான் முக்கிய காரணம். ஆனால் இந்த கசப்பு சுவையுடைய பாகற்காயை, அதன் கசப்பு தெரியாத வகையில் பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் பாகற்காய் தொக்கு.
அதுவும் இந்த பக்குவத்தில் மசாலா அரைத்து சேர்த்து தொக்கு செய்யும் போது, சுவை நாக்கில் நிற்கும். முக்கியமாக இந்த பாகற்காய் தொக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு கசப்பே தெரியாமல் ருசியாக இருக்கும். இதை தயிர் சாதம், மோர்குழம்பு போன்றவற்றுடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். குறிப்பாக ஒருமுறை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த பாகற்காய் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 3
* பூண்டு - 4 பல்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 10
* சீரகம் - 1 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* பாவக்காய் - 1/2 கிலோ
* குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - சிறிது
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு
எடுத்தது)
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, துருவிய
தேங்காய், சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து மசாலாவை தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு,
சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் சிறிது
கொத்தமல்லியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்க
வேண்டும்.
* பின் அதில் விதைகளை நீக்கி நறுக்கிய பாவக்காயை சேர்த்து 2-3 நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்த மசாலாவை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி உயர் தீயில் வைத்து 2 நிமிடம் வதக்கி விட
வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை சேர்த்து, பாகற்காய் வேக சிறிது நீரை
ஊற்றி நன்கு கிளறி, 1 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து உயர் தீயில் வைத்து
3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் மூடி வைத்து எண்ணெய்
பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாகற்காய் தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications