Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பாகற்காயை இப்படி ஒருமுறை சுக்கா செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...
Bitter gourd Sukka Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பாகற்காயை என்றாலே தலைதெறிக்க ஓடுவார்களா? எப்படி பாகற்காயை செய்து கொடுத்தாலும் வேண்டாம் என்பார்களா? அப்படியானால் அடுத்தமுறை பாகற்காயை கொண்டு இந்த ஸ்டைலில் சுக்கா செய்யுங்கள்.
இந்த பாகற்காய் சுக்கா கசப்பே இல்லாமல் சுவையாக இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால், வேண்டாம் என்று மறுக்காமல் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சுக்கா செய்வதற்கு தனி மசாலா என்று எதுவும் தேவையில்லை. வீட்டில் உள்ள சாதாரண மசாலாக்களே போதும்.

உங்களுக்கு பாகற்காய் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாகற்காய் - 500 கிராம்
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4-5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* நாட்டு சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாகற்காயை நறுக்கி, நீரில் போட்டு, அத்துடன் 1/4
டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள பாகற்காயை வடிகட்டி சேர்த்து நன்கு 5
நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய்
தூள், குழம்பு மிளகாய் தூள், சாம்பார் தூள் மற்றும் நாட்டு சர்க்கரை
சேர்த்து நன்கு கிளறி விட்டு, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு
சுருண்டு வரும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான பாகற்காய் சுக்கா
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications