Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Mercury Transit In Cancer On 22 June 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட.

இப்படிப்பட்ட புதன் கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஜூன் 22 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் புதன் ஆகஸ்ட் 05 ஆம் தேதி வரை இருப்பார். இக்காலகட்டத்தில் சில நாட்களுக்கு வக்ர நிலையில் மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார்.
புதனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணவுள்ளனர். இப்போது புதன் பெயர்ச்சியால் நல்ல செல்வத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதுவும் ஊடகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தினருடனான உறவு வலுவடையும். உங்களின் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும் மற்றும் இது மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். உங்களின் கருத்தை மற்றவர்களை ஏற்பார்கள். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும் மற்றும் இது உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதன் மூலம் சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இக்காலம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்காதீர்கள் மற்றும் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பார்கள். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் இதன் மூலம் எதிர்காலத்தில் நிறைய பணத்தை சாம்பாதிப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




