Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
அரைக்கீரை வாங்குனா.. இந்த மாதிரி தொக்கு செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Arai Keerai Thokku Recipe In Tamil: மதியம் சிம்பிளா சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதற்காக அரைக்கீரை வாங்கி வந்துள்ளீர்களா? கீரையை எப்போதும் பொரியலாகவோ, கடைந்தோ சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் ருசியாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் அதைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.
ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கீரையை இந்த பக்குவத்தில் தொக்கு செய்து கொடுக்கும் போது, சுவை வேற வெலலில் இருக்கும். அதுவும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, ருசி பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு அரைக்கீரை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைக்கீரை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1
* பூண்டு - 5-6 பல்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தொக்கு செய்வதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 5
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைக்கீரை - 1 கட்டு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை சிறிது நீரில் ஊற வைத்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அரைக்கீரையை நன்கு பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம்,
5 வெந்தய விதைகள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து, பச்சை
வாசனை நீங்கி, நன்கு எண்ணெய் பிரியும் வரை 5 நிமிடம் மிதமான தீயில்
வைத்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 4 நிமிடம் வதக்கி விட்டு கீரையை வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் புளிச்சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, புளியின்
பச்சை வாசனை போகும் வரை வேக வைத்து, தொக்கு பதத்திற்கு வந்ததும்,
அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான அரைக்கீரை தொக்கு
தயார்.



Click it and Unblock the Notifications