Latest Updates
-
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
Father's Day 2026: ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு தூணாக, குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக, அன்பை அதிகம் வெளிக்காட்டாமல் மிகுந்த அன்பை கொண்டிருப்பவர் தான் அப்பா. இந்த அப்பாவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் தந்தையர் தினம் ஜூன் 21 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் பாசமிக்க அப்பாவை சிறப்புடன் உணர வைப்பதற்காக பிள்ளைகள் பரிசுகளை வழங்குவார்கள்.

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு விதத்தில் தந்தையின் பாத்திரத்தை வகிக்கின்றனர். ஆனால் இந்த 12 ராசிகளில் குறிப்பிட்ட 4 ராசியைச் சேர்ந்தவர்கள் சிறந்த தந்தையின் குணங்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பை கொண்டிருப்பது மட்டுமின்றி, நல்ல பாதுகாப்பு, அனுபவம் மற்றும் வெற்றியை வழங்குவதில் சிறந்தவர்களாக உள்ளனர். இப்போது சிறந்த தந்தையாக திகழும் அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் பொறுமையானவர்கள் மற்றும் அமைதியானவர்கள். இதுவே அவர்களை மிகச்சிறந்த தந்தையாக்குகிறது. ஏனெனில் குழந்தை வளர்ப்பில் பொறுமை மிகவும் அவசியம். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல பாதுகாப்பை அளிக்கிறார்கள். தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள்.
தங்கள் பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால், பொறுமையாக இருந்து, அதை புரியும்படி பிள்ளைகளுக்கு சொல்வதோடு, ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மொத்தத்தில் சரியான திசையில் பிள்ளைகளை வழிநடத்துவார்கள். இந்த ராசிக்காரர்களின் பிள்ளைகள் தந்தையின் மீது அதிக அன்பை கொண்டிருப்பார்கள். அனைத்து வழிகளிலும் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரன் மனதில் காரணியாவார். எனவே இந்த ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், சென்சிடிவ்வானவர்களாகவும் இருப்பர். மேலும் இவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஆழமான உணர்ச்சி பிணைப்பை வளர்த்துக் கொள்வதோடு, அவர்களின் ஒவ்வொரு தேவையையும் கவனித்து அதை பூர்த்தி செய்வார்கள்.
அதுவும் இவர்கள் தங்கள் பிள்ளைகள் வாயை திறந்து எதையும் கேட்பதற்கு முன்னரே அவர்களை புரிந்து கொள்வார்கள். எப்பேற்பட்ட சூழ்நிலைகளிலும் இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளிடம் கோபப்பட்டாலும், பின் அன்பாலும், அக்கறையாலும் சமாளிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் பொறுப்பானவர்கள் மற்றும் நடைமுறைக்கு ஏற்றவர்கள். தங்கள் கடைமைகளை சரிவர செய்வார்கள். ஒழுக்கம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த ஒழுக்கத்தை தாங்கள் கடைப்பிடிப்பதோடு, தங்கள் பிள்ளைகளிடமும் புகட்டுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பு, போராட்டம் மற்றும் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள தங்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பார்கள்.
இந்த ராசிக்கார தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு ரோல்மாடலாக திகழ்வார்கள். சில சமயங்களில் இவர்கள் கண்டிப்பாக இருந்தாலும், மிகுந்த பாசத்தை பிள்ளைகள் மீது கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், வெற்றிகரமானவர்களாகவும் வளர்க்க நினைப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசியைச் சேர்ந்த தந்தைகள் தங்கள் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பார்கள். எப்போதும் தங்கள் திறமைகளை நம்பி முன்னேற்ற குழந்தைகளை ஊக்குவிப்பார்கள். மேலும் இவர்கள் குழந்தைகளுடன் நட்பாக பழகுவார்கள். இதனால் இவர்களின் குழந்தைகள் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் இவர்களுடன் நேரத்தை செலவிடவும், இனிமையான தருணங்களை உருவாக்கவும் விரும்புவார்கள். இந்த ராசிக்கார தந்தைகள் தங்கள் குழந்தைகளை தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி வாழ்வில் முன்னேற தூண்டுவார்கள். முக்கியமாக எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




