Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
Venus Transit In Ayilyam Nakshatra On 23 June 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சுக்கிரன் ஜூன் 23 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன். ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது.
இருப்பினும் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். முக்கியமாக 4 ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்கு மோசமாகவும், யாருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என்பதைக் காண்போம்.
பிரச்சனைகளை சந்திக்கும் ராசிகள்!
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் சில இழப்புக்களை சந்திக்கலாம். தாயாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். வீட்டு வசதிகள் குறைவதை உணரக்கூடும். வீட்டிற்காக திடீரென்று நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். பணியிடத்தில் நடக்கும் அரசியலில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்களின் ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையால் சிரமப்பட நேரிடும். முதலீடுகளை செய்ய இக்காலம் சிறந்தது அல்ல. மோசமான பேச்சால் குடும்பத்தில் மன கசப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் பணத்தை திரும்ப பெற முடியாமல் போகும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். அதுவும் பயணங்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். இந்த செலவுகள் அனைத்தும் விருப்பமின்றி இருக்கும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மை, கண் பிரச்சனைகள் அல்லது கால் வலி போன்றவற்றால் அவதிப்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவழிக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் விலகி இருப்பது நல்லது மற்றும் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பணத்தை சம்பாதிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் பெரிய லாபங்களைப் பெற அதிகம் சிரமப்பட நேரிடும். எந்த ஒரு பண பரிவர்த்தனையும் வெற்றிகரமாக இருக்காது. உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும். இது உங்கள் உறவை பெருமளதில் பாதித்துவிடும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரித்தாலும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். முக்கியமாக அந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், நல்ல பொருள் வசதிகளும் கிடைக்கும். அந்த ராசிக்காரர்களானவன ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகியவை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



