Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்..
Wheat Dosa With Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் கோதுமை தோசை சுடுங்கள்.
அதுவும் வெறும் கோதுமை தோசையை சுடாமல், காய்கறிகளை வதக்கி கோதுமை மாவுடன் சேர்த்து தோசை சுடுங்கள். இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்கும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை தோசை மற்றும் தக்காளியை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னிக்கு...
* தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னி தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
தோசை மாவிற்கு...
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, வரமிளகாய், காஷ்மீரி
வரமிளகாய், சிறிய துண்டு புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சற்றும் நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்
பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், தக்காளி சட்னி தயார்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை
ஊற்றி, கட்டிகளின்றி கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதற்குள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய கேரட் மற்றும் 1 கைப்பிடி கொத்தமல்லியை
சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை ஊற வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து
கலந்து விட வேண்டும். மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது
நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் சேர்த்து, முன்னும்,
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை தோசை தயார்.



Click it and Unblock the Notifications