Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
ஒருடைம் கடலை பருப்பும், வேர்க்கடலையும் வெச்சு இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்..
Kolar Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் அதே சமயம் செய்வதற்கு சுலபமாக இருக்கக்கூடிய ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலைக் கொண்டு செய்யக்கூடிய கோலார் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி கர்நாடகாவின் கோலார் பகுதியில் மிகவும் பிரபலமான சட்னி. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கோலார் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோலார் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் வேர்க்கடலை சேர்த்து வறுத்து, மிக்சர் ஜாரில் வறுத்த
பருப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு, நறுக்கிய தக்காளி, சீரகம்,
கறிவேப்பிலை, வரமிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை ஜாரில் உள்ள பருப்புடன் சேர்த்து, சிறிது
உப்பு தூவி, நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை ஊற்றி, சிறிது நீரை ஊற்றி கிளறி, அடுப்பை
அணைத்தால், சுவையான கோலார் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications