Latest Updates
-
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்..
Vendakkai Gravy Recipe In Tamil: இதுவரை வெண்டைக்காயை பொரியல், சாம்பார் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த வெண்டைக்காயைக் கொண்டு கிரேவியும் செய்யலாம். அதுவும் தயிர் சேர்த்து செய்யும் வெண்டைக்காய் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக வெண்டைக்காயை இந்த சுவையில் செய்யும் போது, வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த வெண்டைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் கிரேடிவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்டைக்காய் - 1/4 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
தயிர் கலவை..
* கெட்டி தயிர் - 100 கிராம்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தயிர் கலவை
* உப்பு - சுவைக்கேற்ப
* வதக்கிய வெண்டைக்காய்
* தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்
மற்றும் உப்பு சேர்த்து கைவிடாமல் 5 நிமிடம் வதக்கி இறக்கி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிரை எடுத்து, அத்துடன் மிளகாய்
தூள், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பச்சை
மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தயிர் கலவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி
குறைவான தீயில் வைத்து மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் வதக்கிய வெண்டைக்காயை
சேர்த்து கிளறி, 1 டம்ளர் நீரை ஊற்றி கலந்து, மிதமான தீயில் வைத்து
மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான வெண்டைக்காய் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications