Latest Updates
-
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்!
Guava Benefits In Tamil: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் தான் பழங்கள். இந்த பழங்களில் ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் உள்ளன. இதனால் தான் உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் பழங்களை உணவில் அதிகம் சேர்த்து வர அறிவுறுத்துகின்றனர்.

அதுவும் சில வகையான பழங்கள் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்தானது. அப்படிப்பட்ட ஒரு பழம் தான் கொய்யாப்பழம். இந்த பச்சை நிற பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இந்த பழம் விலைக்குறைவில் கிடைக்கக்கூடியது.
இப்படிப்பட்ட பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் ஷுபம் வாட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு கொய்யாப்பழம் ரொம்ப பிடிக்குமானால், அதை தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்து தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிக வைட்டமின் சி
நம் நாட்டில் மாம்பழங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கொய்யாப்பழமும் பெற்றால், வைட்டமின் சி குறைபாட்டில் இருந்து அனைவரும் விடுபடுவார்கள் என்று டாக்டர் கூறினார். ஏனெனில் கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. மேலும் இது தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்றும் டாக்டர் கூறினார்.
அசிடிட்டி
உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளதா? அப்படியானால் கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். ஏனெனில் கொய்யாப்பழம் நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவுகிறது. அதோடு இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தம்
தற்போது இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, அதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் என்று டாக்டர் கூறினார். எனவே பிபி உள்ளவர்கள் தினமும் கொய்யா சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை நோய்
கொய்யாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது என்று டாக்டர் கூறினார்.
இதய ஆரோக்கியம்
இதயத்திற்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்று டாக்டர் கூறுகிறார். ஏனெனில் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதைத் தடுப்பதோடு, கெட்ட கொழுப்புக்களை கட்டுப்படுத்த உதவுகிறது. அதுவும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆகவே இதயம் தொடர்பான நோய்கள் வரக்கூடாதெனில் கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
