2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க..

IPL 2026: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக், அல்லது ஐபிஎல் 2026 போட்டிகள் மார்ச் 28 ஆம் தேதி அன்று தொடங்கப்படவுள்ளன. இந்தியாவில் இந்த கிரிக்கெட் தொடரை ஒரு பிரம்மாண்டமான திருவிழா போன்று மக்கள் கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியில் பல புதிய வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக்கள் கிடைக்கும். குறிப்பாக 20 வயதிற்குட்பட்ட பல இளம் வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் அதிரடியான விளையாட்டினால் பலரை ஆச்சரியப்படுத்துவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

IPL 2026 Top Five Youngest Players In IPL 2026 One is from Chennai Super Kings

முக்கியமாக 5 வீரர்கள் 20 வயதிற்குட்பட்டவர்கள். அதில் ஒரு வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இப்போது 2026 ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள டாப் 5 இளம் வீரர்கள் யார்யார் மற்றும் எந்த அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பதைக் காண்போம்.

1. வைபவ் சூர்யவன்ஷி

2025 ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு இளம் வீரர் தான் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரிலேயே மிகவும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயது ஆகிறது. பீகாரைச் சேர்ந்த இந்த இளம் வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் ₹ 1.10 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. வைபவ் சூரியவன்ஷி 2025 ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டியில் பங்கேற்று அதிரடியாக விளையாடி 252 ரன்களை எடுத்தார். முக்கியமாக இவர் ஒரு சதமும் அடித்துள்ளார்.

2. சாஹில் பரிக்

2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மற்றொரு இளம் வீரர் தான் சாஹில் பரிக். 18 வயதான சாஹில் பரிக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சுமார் ₹30 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. சாஹில் பரிக் மிகவும் திறமையான ஒரு இளம் வீரராக கருதப்படுகிறார். இந்த ஐபிஎல் தொடரில் இவர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பை டெல்லி கேப்பிட்டல்ஸ் கொண்டுள்ளது.

3. சாத்விக் தேஸ்வால்

2026 ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ளும் மற்றொரு இளம் வீரர் தான் சாத்விக் தேஸ்வால். 18 வயதான சாத்விக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ₹30 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி-க்காக சாத்விக் களமிறங்கவுள்ளார். விராட் கோலியின் அணியில் இடம் பெறப்போகும் சாத்விக், அணிக்காக நிறைய ஸ்கோர் செய்வார் என்று நம்புவோம்.

4. விஹான் மல்ஹோத்ரா

18 வயதான விஹான் மல்ஹோத்ராவும் 2026 ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ளார். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ₹30 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. இவர் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலக்கோப்பை அணியிலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரில் தனது திறமையை வெளிப்படுத்த தயாராக உள்ளார்.

5. ஆயுஷ் மத்ரே

2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போகும் ஆயுஷ் மத்ரே 18 வயதுடையவர். இவரை சென்னை சூப்பர கிங்ஸ் அணி ₹30 லட்சம் கொடுத்து தங்கள் அணிக்கு வாங்கியுள்ளது. இவரும் 2025 ஐபிஎல் தொடரில் கலந்துள்ளார். அப்போது அவர் 7 போட்டியில் கலந்து கொண்டு 240 ரன்களை எடுத்து குவித்துள்ளார். இவரது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 94 ரன்களாகும். இப்படியான திறமையான இளம் வீரர் சிஎஸ்கேயில் இடம் பெற்றிருப்பது, நிச்சயம் விளையாட்டில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

Story first published: Thursday, March 19, 2026, 16:34 [IST]
Desktop Bottom Promotion