உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க..

Blood Pressure: இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தை இதயம் பம்ப் செய்யும் போது, தமனி சுவர்களில் இரத்த ஓட்டம் ஏற்படுத்தும் அழுத்தம் ஆகும். இந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. அதுவும் ஒருவரது இரத்த அழுத்தம் அதிகமாகி, அதை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், உயிருக்கு ஆபத்தை ஏற்படும் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய்கள் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரித்துவிடும்.

இப்படிப்பட்ட உயர் இரத்த அழுத்த அறிகுறிகள் தெரிந்தால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், சரியாக நிர்வகிக்கவும் உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன. அதுவும் குறிப்பிட்ட சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

Harvard-trained Doctor Lists Top 5 Foods That Lower Blood Pressure

ஹார்வர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மருத்துவ நிபுணரான டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவியல்பூர்வமாக உறுதிபடுத்தப்பட்ட உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் டாப் 5 உணவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அந்த உணவுகள் பின்வருமாறு:

1. வாழைப்பழம்

அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழம் ஒரு மிகச்சிறந்த ஸ்நாக்ஸ். "வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இது உடலில் இருந்து சிறுநீரகங்களின் மூலம் சோடியத்தை வெளியேற்ற உதவி புரிந்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிகிறது" என்று டாக்டர். சேத்தி கூறினார்.

2. டார்க் சாக்லேட்

"டார்க் சாக்லேட்டில் மக்னீசியம், ப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன. இவை இரண்டும் நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன" என்று டாக்டர் கூறினார். ஆய்வுகளிலும் தினமும் சிறிய அளவில் உயர் தரமான டார்க் சாக்லேட்டை சாப்பிடுவது கணிசமான அளவில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிவதாக தெரிய வந்துள்ளன.

Harvard-trained Doctor Lists Top 5 Foods That Lower Blood Pressure

3. பீட்ரூட்

"பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலினுள் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது" என்று டாக்டர் கூறினார். ஆய்வுகளில் கூட தொடர்ந்து பீட்ரூட் ஜூஸை குடித்து வருவது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளன.

4. மாதுளை

மாதுளம் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இதனால் இப்பழமானது உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக "மாதுளை ஆஞ்சியோடென்சின்-மாற்றும் நொதியின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்" என்று டாக்டர் சேத்தி கூறினார்.

Harvard-trained Doctor Lists Top 5 Foods That Lower Blood Pressure

5. இஞ்சி

இஞ்சி மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். இந்த இஞ்சியை தினசரி உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து வந்தால், கணிசமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். "இஞ்சி ஒரு இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாகச் செயல்பட்டு, இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க பயனுள்ளதாக இருக்கிறது" என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அதை இயற்கை வழியில் கட்டுப்படுத்த நினைத்தால், டாக்டர் சேத்தி கூறியுள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, March 16, 2026, 20:43 [IST]
Desktop Bottom Promotion