Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் ஒன்றாக இணையும் போது எப்போதும் நேர்மறையான மாற்றங்களை மட்டும் ஏற்படுத்துவதில்லை, சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தலாம். மார்ச் 20 அன்று, சூரியனும் சந்திரனும் மீன ராசியில் சனியுடன் இணைகின்றன. ஜோதிடத்தின்படி இது மிகவும் மோசமான நேரமாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.
சூரியனின் மார்ச் 15 அன்று தனது மீன ராசிக்கு நகர்ந்தார், மேலும் சந்திரன் மார்ச் 20 அன்று மீன ராசியில் நுழையும். சனிபகவான் ஏற்கனவே மீன ராசியில் நிலைபெற்றுள்ளார். இந்த மூன்று கிரகங்களும் இணையும்போது, அது உருவாக்கும் அசுப யோகங்கள் சில ராசிகளுக்கு எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தப்போகின்றன. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் இந்த அசுப யோகம் உருவாகப்போகிறது. இது அவர்கள் தொழில் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க முடியாது, மேலும் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவர்களைத் தேடி வரும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலன் மற்றவர்களுக்கு செல்வது மட்டுமின்றி, பொருளாதாரரீதியாகவும் பின்னடைவுகளை சந்திப்பார்கள்.
ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் முயற்சி செய்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் அது உங்களின் துரதிர்ஷ்டத்தை மேலும் அதிகமாக்கும். தொழில் வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் இது சோதனையான காலகட்டமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம், பொறுமையாக இருக்கவில்லை என்றால் இது தற்காலிக பிரிவுக்கு வழிவகுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் எட்டாம் வீட்டில் இந்த அசுப யோகம் உருவாகிறது. இது அவர்களுக்கு பாதகமான பலன்களைத் தரக்கூடும். வேலையில் அவர்கள் பல்வேறு தடைகளைச் சந்திக்க நேரிடும். மேலும், நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். கடந்த கால தவறுகளை இப்போது சரி செய்து கொள்வது நல்லது. இல்லையெனில், அது உங்களைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தும்.
அவர்களின் சிறு தவறுகள் கூட பெரிய நஷ்டங்களுக்கு வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு அவர்கள் மீதிருக்கும் நம்பிக்கை குறையும். சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் இந்த அசுப யோகம் உருவாகப்போகிறது. இதனால் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்களின் நிதி நிலைமை கணிசமாக மோசமடையக்கூடும். இந்த நேரத்தில் நெருங்கிய ஒருவரால் ஏமாற்றப்படலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம்.
நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள், குறிப்பாக பங்குச் சந்தையில், இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உறவினர்களிடமிருந்து எதிர்பாராத கெட்ட செய்திகள் திடீரென தேடிவரும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இது இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

