Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா?
Summer 2026: தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்து சேனல்களிலும் AC விளம்பரங்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. ஆனால் அனைவராலும் வீட்டிற்கு AC வாங்க முடியாதல்லவா?
பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களின் வீடுகளில் சீலிங் பேன்தான் இருக்கும். ஆனால் வெயில் காலத்தில்தான் அவை மெதுவாக சுற்றத் தொடங்கும். உங்கள் வீட்டில் உள்ள பேன் போதுமான காற்றோட்டத்தை வழங்கவில்லை என்றாலோ; அல்லது அந்த மின்விசிறியின் சுழற்சி வேகத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலோ, புது பேன் வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் மின்விசிறி ஏன் மெதுவாகச் சுழல்கிறது என்பது குறித்தும், அதன் சுழற்சி வேகத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பேன் மெதுவாக சுற்றுவதற்கான காரணங்கள்:
மோசமான மின்தேக்கி(Capacitor)
ஒரு சீலிங் பேனில் உள்ள கெபாசிட்டர் மின்தேக்கிதான், மோட்டாருக்குத் தேவையான சரியான ஆற்றலை வழங்குகிறது. ஒரு பழுதடைந்த மின்தேக்கியே 90%-க்கும் மேற்பட்ட சீலிங் பேன் பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. மின்தேக்கி பழுதடையும்போது, மோட்டாருக்கு சக்தியை அனுப்ப முடியாது. அதுமட்டுமின்றி, உங்கள் சீலிங் பேன் அதன் வழக்கமான வேகத்தை விட மெதுவாக இயங்குவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கலாம்.
இறக்கையில் ஏற்படும் பிரச்சினைகள்
பெரும்பாலும், சீலிங் பேனின் இறக்கைகள் சேதமடைவதால், மின்விசிறியின் சமநிலை குலையக்கூடும், மேலும் அவை சத்தத்தை உருவாக்கவும் தொடங்கலாம். உங்கள் மின்விசிறியின் இறக்கைகள் ஏதேனும் வளைந்திருந்தால் ஆடை உடனடியாக மாற்றிவிடுங்கள், ஏனெனில் அது காற்றின் வேகத்தைக் குறைப்பதுடன் காயத்தை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது.
பேரிங் பிரச்சினைகள்
சீலிங் ஃபேன்களின் பேரிங்குகளில் காலப்போக்கில் அழுக்குத் துகள்கள் மற்றும் தூசி பொதுவாகச் சேர்கின்றன. இது பெரும்பாலும் சீலிங் ஃபேனின் வேகத்தைக் குறைப்பதோடு, பேரிங் நகர்வதையும் கடினமாக்குகிறது. இதனால் காற்றின் வேகம் குறையலாம்.
லூப்ரிகேஷன் சிக்கல்
ஒரு சீலிங் ஃபேனின் மோட்டாரில் உள்ள லூப்ரிகேஷன் அதுநன்றாகச் செயல்படுவதற்கு மிகவும் முக்கியமானது. மோட்டாரின் உள்ளே உள்ள இயந்திர பாகங்களுக்குச் சரியாக லூப்ரிகேஷன் இல்லாவிட்டால், அவை காலப்போக்கில் உலரத் தொடங்குகின்றன. இது இறுதியில் வேகமாக சுற்றும் சீலிங் ஃபேனை காலப்போக்கில் மெதுவாக சுற்ற வைக்கிறது, இதனால் காற்றின் வேகம் குறைகிறது.
சீலிங் பேன் வேகமாக சுற்ற என்ன செய்ய வேண்டும்?
இறக்கைகளை சுத்தப்படுத்த வேண்டும்
சீலிங் பேனை சுத்தம் செய்ய, ஒரு இறக்கையைத் தலையணை உறைக்குள் நுழைத்து, அதன் மேல் மற்றும் அடிப்பகுதிகளைத் துடைக்கவும். தரையில் விழக்கூடிய தூசுகளை அந்தத் தலையணை உறை பிடித்துக்கொள்ளும். அதேபோல மின்விசிறி இறக்கைகளை வளையாமல் இருக்கும்படி நேராக வைக்கவும். இறக்கைகளை சரியாக சுத்தம் செய்து நேராக வைத்திருந்தால் மட்டுமே காற்று வேகமாக வரும்.
மின்விசிறிக்கு எண்ணெய் போட வேண்டும்
உங்கள் மின்விசிறியில் எண்ணெய் ஊற்றுவதற்கான துளைகள் இருந்தால், அவற்றை திறந்து அதில் அடிக்கடி எண்ணெயை ஊற்றவும். ஒருவேலை துளைகள் இல்லையென்றால், மின்விசிறியை கீழே இறக்கி, பேரிங்களில் நேரடியாக எண்ணெயை போட்டு, எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படுவதற்காக மின்விசிறியை முன்னும் பின்னும் சுழற்றவும்.
கெப்பாசிட்டரை மாற்றவும்
உங்கள் சீலிங் பேனின் வேகம் குறைய மின்தேக்கியில் ஏற்படும் பிரச்சினையே முக்கிய காரணாமக இருக்கும். மின்தேக்கி(Capacitor) பொதுவாக மின்விசிறியின் மையத்தில் அமைந்திருக்கும். பேனின் வேகத்தை அதிகரிக்க இதை அவ்வப்போது மாற்றவும்.
பழைய சீலிங் பேன்
ஒரு சீலிங் பேனானது, அதன் பயன்பாடு, தரம் மற்றும் முறையான பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்து 10 முதல் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். மேலே குறிப்பிடப்பட்ட சிக்கல்களைச் சரிசெய்த பிறகும் விசிறியின் வேகம் குறைவாகவே இருந்தால், அந்த விசிறியை அகற்றிவிட்டுப் புதிய ஒன்றை மாற்ற வேண்டிய நேரமிது.



Click it and Unblock the Notifications












