Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உலகம் தோன்றிய காலம் முதலே தங்கம் ஆடம்பரம், செல்வம் மற்றும் கௌரவத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. அதன் பளபளப்பான வசீகரமும், அது கொடுக்கும் அங்கீகாரமும் தங்கத்திற்கு மற்ற உலோகங்களை விட சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கிறது. தங்கம் அனைவரும் விரும்பும் ஒரு உலோகமாக இருந்தாலும் சிலர் இயற்கையாகவே தங்கத்தின் மீது அதிக ஆர்வமும், ஆசையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜோதிடத்தின் படி ஒருவரின் தங்கத்தின் மீதான இந்த அதீத ஆசைக்கு அவர்கள் பிறந்த ராசி ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சில ராசிகளில் பிறந்தவர்கள், குறிப்பாக இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கம் அணிவதில் அதிக மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், தங்கள் கம்பீரமான மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமைகளுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் கவர்ச்சியான மற்றும் ஆடம்பரமான பொருட்கள் மீது இயல்பாகவே ஒரு தீவிரமான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர், இதனால் தங்கம் இயல்பாகவே அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருகிறது. அவர்களின் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையான இயல்புடன், சிம்ம ராசி பெண்கள் தங்க நகைகளை ஆர்வத்துடன் அணிந்து கொள்கிறார்கள். தங்கத்தின் சூடான பளபளப்பு அவர்களின் உள் நெருப்புடன் எதிரொலிக்கிறது, இது அவர்களின் அரச குணத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் அழகான மற்றும் அங்கீகாரத்தைக் கொடுக்கும் பொருட்களை மிகவும் மதிக்கிறார்கள், தங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் அழகு, ஆறுதல் மற்றும் ஆடம்பரத்தை மதிக்கிறார்கள். தங்க நகைகள் அவர்களின் நேர்த்தியான ரசனைகளை இயல்பிலேயே ஈர்க்கின்றன, மேலும் அவர்கள் பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் போற்றக்கூடிய காலத்தால் அழியாத நகைகளைத் தேர்வு செய்கிறார்கள். வசீகரகமான தங்கச் சங்கிலிகள் முதல் தனித்துவமான காதணிகள் வரை, ரிஷப ராசி பெண்கள் தங்க நகைகளில் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் மிகுந்த ஆறுதலை அடைகிறார்கள்.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் மற்றொரு ராசியான துலாம் ராசி பெண்கள், நல்லிணக்கம், சமநிலை மற்றும் அழகியல் மீதான தங்கள் காதலுக்காக அறியப்படுகிறார்கள். அவர்களுக்கு அழகை ரசிக்கும் இயல்பான பார்வை உண்டு, மேலும் தங்களை எப்போதும் நேர்ததியாக வெளிப்படுத்த வேண்டும் என்ற தீவிர விருப்பமும் அவர்களிடம் உள்ளது. தங்க நகைகள் அவர்களின் நுட்பமான ரசனைக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றன, மேலும் தங்கம் தனது தோற்றத்திற்கு அளிக்கும் நேர்த்தியை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் அணியும் அல்லது ரசிக்கும் நகைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானதாக இருக்கும். அதனாலேயே துலாம் ராசி பெண்கள் தங்க நகைகளால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
தனுசு
தனுசு ராசி பெண்கள் தங்கள் சாகச மற்றும் சுதந்திரமான மனநிலைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தனித்துவமான மற்றும் வழக்கத்திற்கு மாறான நகைகளைத் தேடுவார்கள். தங்க நகைகள், அதன் பல்துறை பயன்பாடு மற்றும் காலத்தால் அழியாத கவர்ச்சியுடன், தனுசு ராசிக்காரர்களுக்கு சுய வெளிப்பாட்டிற்கான சரியான தேர்வாக விளங்குகிறது. அவர்கள் தங்கத்தின் பிரகாசத்தை தங்கள் சுதந்திர ஆன்மாக்களின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அணியும் நகைகள் அவர்களுடைய எண்ணங்களை வெளிப்டுத்தும் ஊடகமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

