Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
No Gas No Oil No Boil Aval Payasam Recipe In Tamil: இன்று திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுளுக்காக காரடையான் நோன்பை மேற்கொள்வார்கள். அப்படி நோன்பு மேற்கொள்ளும் போது, கடவுளுக்கு இனிப்புக்களை படைத்தும் வழிபாடு செய்வோம்.
அதுவும் தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அடுப்பை அதிகம் பயன்படுத்தாமல் செய்யக்கூடிய ரெசிபிக்களை பலரும் தேடி, அதை ட்ரை செய்து வருகின்றனர்.

இந்த காரடையான் நோன்பிற்கு நீங்கள் பாயாசம் ஏதாவது செய்ய நினைத்தால், அடுப்பில்லாமல் செய்யக்கூடிய அவல் பாயாசத்தை செய்யுங்கள். இந்த அவல் பாயாசத்தை அடுப்பு பயன்படுத்தாமல் எப்படி செய்வதென்று மிகவும் பிரபலமான செஃப் தீனா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியுள்ளார்.
உங்களுக்கு செஃப் தீனா அவர்களின் ஸ்டைலில் அவல் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு அவல்/வெள்ளை அவல் - 100 கிராம்
* வாழைப்பழம் - 3-4
* பெரிய தேங்காய் - 1
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
* முந்திரி - 10-15
* உலர் திராட்சை - 10-15
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சிவப்பு அவலை எடுத்து, அதில் நீரை
ஊற்றி குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காயை சேர்த்து, 2 டம்ளர் நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த தேங்காயை வடிகட்டி கெட்டியான தேங்காய் பாலை எடுத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீதுள்ள தேங்காயை மீண்டும் ஜாரில் போட்டு, 1 டம்ளர் நீரை ஊற்றி
நன்கு அரைத்து, அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த அவலுடன் வாழைப்பழத்தை நசுக்கி சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், பொடியாக
நறுக்கிய முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு மசித்து
விட வேண்டும்.
*அடுத்து மசித்த பொருட்களை தேங்காய் பாலுடன் சேர்த்து நன்கு கலந்து
விட்டால், சுவையான அவல் பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications