Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது..
Saturn Mercury Conjunction 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் சில கிரகங்களின் சேர்க்கைகள் மிகவும் அரிதாக நிகழும். அப்படி நிகழும் கிரக சேர்க்கைகள் இன்னும் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதியின் கடவுளாகவும், கர்ம வினைகளை அளிப்பவருமாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருவதோடு, வாழ்க்கையில் நல்லொழுக்கம், பொறுப்பு மற்றும் பொறுமையையும் கற்று தருவார். அதே வேளையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.

இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வணிகம் ஆகியவற்றின் காரணியாவார். இதில் ஏற்கனவே சனி பகவான் 30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது மீன ராசியில் ஒன்றிணையும் சனி மற்றும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். முடிவெடுக்கும் திறன் வலுபெறும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் வேலை மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்து விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
வணிகத்தில் முதலீடுகளை செய்ய இக்காலம் சிறந்ததாக இருக்கும். இருந்தாலும் முதலீடுகளை சற்று யோசித்த பின்னரே செய்ய வேண்டும். முடிந்தால் அனுபவசாலிகளின் ஆலோசனையை பெற்று செய்தால், நல்ல லாலத்தைப் பெறலாம். நிதி நிலை உயரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். இருந்தாலும் பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகள் சரியான நேலத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


