அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி எதனால் வருகிறது? அதை எப்படி கண்டறிவது?

Posted By:
Subscribe to Boldsky

அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சியால் ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சராசரியாக, ஆயிரத்தில் 6 பேர் கட்டாயம் அப்பெண்டிக்ஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதனால் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் தான் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் 11 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் தான் அப்பெண்டிக்ஸ் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

Unmistakable Signs Of Appendicitis You Should Never Ignore

பெரும்பாலும் அமெரிக்காவில் தான் ஏராளமானோர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். சொல்லப்போனால், வருடத்திற்கு 250,000-க்கும் அதிகமாக குடல்வால் பகுதியை நீக்கும் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. சரி, ஒருவரருக்கு எதனால் அப்பெண்டிக்ஸ் பிரச்சனை வருகிறது? அந்த அப்பெண்டிக்ஸ் இருந்தால் எம்மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பெண்டிக்ஸ்

அப்பெண்டிக்ஸ்

அப்பெண்டிக்ஸ் எனும் குடல்வால் சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது அடிவயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. குடல்வால் சுமார் 4 இன்ச் நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கும். சிலருக்கு இந்த குடல்வால் குடலுக்கு பின்புறம் அமைந்திருக்கும். இந்த குடல்வாலில் அழற்சி எதனால் ஏற்படுகிறது என்று மருத்துவர்களால் கூட சரியாக சொல்ல முடியவில்லை.

அப்பெண்டிக்ஸ் பணி என்ன?

அப்பெண்டிக்ஸ் பணி என்ன?

பலருக்கும் அப்பெண்டிக்ஸ் நம் உடலில் எம்மாதிரியான பணியை செய்கிறது என்ற சந்தேகத்தைக் கொண்டுள்ளனர். சிலர் இந்த அப்பெண்டிக்ஸ் செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்கள் மற்றும் நோயெதிர்ப்பு ம ண்டலத்தின் செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பாக்டீரியாக்களையும் கொண்டுள்ளதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த குடல்வால் ஒரு தேவையில்லாத உறுப்பு என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த உறுப்பு இல்லாமல் கூட ஒருவரால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

அப்பெண்டிக்ஸ்/குடல்வால் அழற்சியை எது உண்டாக்குகிறது?

அப்பெண்டிக்ஸ்/குடல்வால் அழற்சியை எது உண்டாக்குகிறது?

மெடிக்கல் நியூஸ் டுடேவின் படி, குடல்வால் வீங்கியோ, அழற்சியுடனோ மற்றும் சீழ் நிறைந்து இருக்கும் நிலை தான் குடல்வால் அழற்சி. இந்த குடல்வால் அழற்சி செரிமான மண்டலத்தில் உள்ள தொற்றுக்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓட்டுண்ணிகள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வுகள், கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமான பாதையில் உள்ள காயங்கள் போன்றவற்றாலும் குடல்வால் அழற்சி ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்து

உயிருக்கு ஆபத்து

ஒருவரது குடல்வால் அழற்சிக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், அது வயிற்றின் உள்ளேயே வெடித்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. எனவே குடல்வால் அழற்சி இருந்தால், அது தெரிந்த உடனேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், குடல்வாலில் உள்ள சீழ் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பரவி, உடல்நிலையை மோசமாக்கி, ஒரு கட்டத்தில் உயிரையே பறித்துவிடும்.

அப்பெண்டிக்ஸை கண்டறிவது எப்படி?

அப்பெண்டிக்ஸை கண்டறிவது எப்படி?

அப்பெண்டிக்ஸை இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எம்ஆர்ஐ, சிடி அல்லது அல்ட்ர்சவுண்ட் ஸ்கேன் போன்றவற்றின் மூலம் கண்டறிய முடியும். அப்பெண்டிக்ஸ் பிரச்சனையை ஆன்டி-பயாடிக்ஸ் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் அல்லது அறுவை சிகிச்சை மூலம் அந்த குடல்வால் நீக்கப்படும். பெரும்பாலும் மருத்துவர்கள் அப்பெண்டிக்ஸ் பிரச்சனை தீவிர நிலையில் இருந்தால் அறுவை சிகிச்சையைத் தான் பரிந்துரைப்பர்.

அப்பெண்டிக்ஸ் அறிகுறிகள்

அப்பெண்டிக்ஸ் அறிகுறிகள்

அப்பெண்டிக்ஸ் பிரச்சனையை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. பெரும்பாலும் அப்பெண்டிக்ஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளை மற்ற பிரச்சனைகளுடன் சேர்த்து பலர் குழப்பமடைவார்கள். அதில் இரைப்பைக் குடல் அழற்சி, கடுமையான எரிச்சல் கொண்ட குடல் நோய் (IBS), மலச்சிக்கல், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர் தொற்று, கிரோன் நோய், இடுப்பு தொற்று போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்போது ஒருவருக்கு அப்பெண்டிக்ஸ் அல்லது குடல்வால் அழற்சி இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளைக் காண்போம்.

அடிவயிற்று வலி

அடிவயிற்று வலி

அப்பெண்டிக்ஸ் இருந்தால் அடிவயிற்றின் மையப் பகுதியில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். அதாவது தொப்புள் அருகே வலியை சந்திக்க நேரிடும். அதுவும் ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்று கூர்மையாக வலியை அடிவயிற்றில் அனுபவிக்கக்கூடும். அதிலும் குடல்வால் அழற்சி தீவிரமாக இருந்தால், அடிவயிற்றின் வலது பக்கத்தில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்படும்.

வாந்தி

வாந்தி

ஒருவருக்கு அப்பெண்டிக்ஸ் பிரச்சனை இருப்பின், செரிமான பாதையில் ஏற்படும் இடையூறால் அடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வைப் பெறக்கூடும். இதற்கு குடல்வாலில் கிருமிகள் நிறைந்த சீழ் தேங்கியிருப்பது தான் காரணம்.

வலிமிக்க இருமல்

வலிமிக்க இருமல்

இருமலின் போது, நடக்கும் போது, ஆழமாக மூச்சு விடும் போது, தும்மலின் போது கடுமையான வலியை அடிவயிற்றில் சந்தித்தால், அதுவும் அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு

வாந்தியுடன் வயிற்றுப் போக்கும் ஏற்படுகிறதா? செரிமான பாதையில் எது எரிச்சலூட்டினாலும் அது வாந்தியுடன் வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். அதிலும் வயிற்றுப் போக்கின் போது, மலமானது இரத்தம் கலந்தோ அல்லது அடர் நிறத்திலோ இருக்குமாயின், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

காய்ச்சல்

காய்ச்சல்

அப்பெண்டிக்ஸ் இருந்தால், காய்ச்சலானது 99°F (37.2°C) முதல் 100.5°F (38°C) வரை இருக்கும். சில நேரங்களில் காய்ச்சலுடன் கடுமையாக குளிரையும் சந்திக்க நேரிடும். ஒருவேளை அப்பெண்டிக்ஸ் வெடிக்கும் நிலையில் இருந்தால், காய்ச்சல் இன்னும் அதிகரிக்கும். அதோடு இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கலும் அப்பெண்டிக்ஸ் பிரச்சனைக்கான பொதுவான அறிகுறியாகும். முக்கியமாக எக்காரணம் கொண்டும் மலச்சிக்கலை மளமிளக்கிகள் கொண்டே அல்லது இனிமா மூலமோ சரிசெய்ய முயல வேண்டாம். ஏனெனில் இந்த சிகிச்சைகள் அப்பெண்டிக்ஸை வெடிக்கச் செய்து, நிலைமையை படு மோசமாக்கிவிடும்.

பசியின்மை

பசியின்மை

மலச்சிக்கல் அல்லது வாந்தி அல்லது வயிற்றுப் போக்குடன், பசியின்மையை சந்தித்தால், அதுவும் அப்பெண்டிக்ஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் கடுமையான அடிவயிற்று வலியுடன் பசியுணர்வே இல்லாமல் இருந்தால், உங்களுக்கு குடல்வால் அழற்சி உள்ளது என்று அர்த்தம்.

வாய்வு வலி

வாய்வு வலி

உடலில் இருந்து வாயுவை வெளியேற்றும் போது கடுமையான வலியை சந்திக்கிறீர்களா? இல்லாவிட்டால் வாயுவை வெளியேற்ற முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால், இதுவும் அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

சரியில்லாத உணர்வு

சரியில்லாத உணர்வு

உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை இருப்பது போல் உங்களுக்கு தோன்றுகிறதா? அப்படியானால், அப்படிப்பட்ட எண்ணத்தை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுகி, அப்பெண்டிக்ஸ் உள்ளதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unmistakable Signs Of Appendicitis You Should Never Ignore

Appendicitis is a common disease that affects millions of people every year. appendicitis can easily be confused with something else. Here are a few of the straightforward symptoms. Read on...
Subscribe Newsletter