Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
World Kidney Day 2026: ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், அதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடைபெறும்.
அப்படி சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை தான் சிறுநீரக கற்கள். ஒவ்வொரு ஆண்டும், 500,000 க்கும் மேற்பட்டோர் சிறுநீரக கற்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் சிறுநீரகக் கல் ஏற்படும்.

சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது?
சிறுநீரக கற்கள் என்பவை சிறுநீரில் உள்ள கெமிக்கல்களால் உருவாகும் ஒரு கடினமான கல்லாகும். பொதுவாக சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, சிறுநீர் வழியாக கழிவுகளை வெளியேற்றுகின்றன. இதனால் சிறுநீரில் நிறைய கெமிக்கல்கள் இருக்கும்.
அதில் சில கெமிக்கல்கள் அதிகமாகவும், போதுமான நீர் இல்லாமல் இருந்தால், அந்த கெமிக்கல்கள் ஒட்டிக் கொண்டு, கற்களாக உருவாகி, சிறுநீரகங்களில் படிந்துவிடும். அப்படி சிறுநீரக கற்களை உண்டாக்கும் மிகவும் பொதுவான கெமிக்கல்கள் கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன் மற்றும் பாஸ்பேட் ஆகியவை.
சிறுநீரக கற்கள் எதனால் வருகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக கற்களானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் நீரிழப்பு, அதிகப்படியான அமிலம் சிறுநீரில் இருப்பது, சிறுநீரக பாதை தொற்றுகள் மற்றும் சிறுநீரகங்களில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் தேங்கியிருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அதன் விளைவாக கடுமையான கீழ் முதுகு வலி, அடிவயிற்று வலி, சிறுநீரக பாதையில் மிதமானது முதல் தீவிரமான வலியை சந்திக்க நேரிடும்.
இன்னும் சிலர் வாந்தி, குமட்டல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, குளிர் அல்லது அதிகப்படியான வியர்வையை சந்திக்கக்கூடும். முக்கியமாக சிறுநீரக கற்களின் அளவைப் பொறுத்து, அறிகுறிகள் மிதமானதாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம். இந்த சிறுநீரக கற்களை கண்டறிந்து, அதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பின் கல் பெரிதாகி, நிலைமை மோசமாகிவிடும்.
இப்படியான சிறுநீரக கற்களைக் கரைப்பதற்கு ஆயுர்வேதத்தில் ஒரு அற்புதமான மூலிகை டீ உள்ளது என்பது தெரியுமா? இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களை கரைத்து, வெளியேற்றலாம் என்று ஆயுர்வேத டாக்டரான மைதிலி கூறினார். அதென்ன மூலிகை டீ, அதை எப்படி தயாரிப்பது, எப்போது குடிப்பது, இந்த டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்தும் ஆயுர்வேத டாக்டர் மைதிலி விரிவாக தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிறுகண் பீளை டீ
"சிறுநீரக கற்களை இயற்கையாகவே கரைத்து வெளியேற்ற உதவும் ஒரு ஆயுர்வேத மூலிகை செடி தான் சிறுகண் பீளை செடி. இந்த செடி 1 மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் பஞ்சு ஒட்டி வைத்தது போன்று அழகாக இருக்கும். இதன் பூக்கள், இலைகள் மட்டுமின்றி, அதன் வேர்களிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன" என்று டாக்டர் மைதிலி கூறினார்.
இந்த சிறுகண் பீளை செடியை நாம் அனைவருமே பொங்கல் பண்டிகை காலத்தில் கண்டிருப்போம். அது வேறொன்றும் இல்லை, அது தான் காப்பு செடி. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளில் வீட்டில் காப்பு கட்டும் போது ஆவாரம் பூ, வேப்பிலையுடன், பொடிபொடியான வெள்ளை நிற பூக்களைக் கொண்ட சிறுகண் பீளை செடியையும் வைத்து தான் காப்பு கட்டுவோம். இதனால் இந்த செடியை காப்பு செடி என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
சிறுகண் பீளை டீ தயாரிப்பது எப்படி?
* "சிறுகண் பீளை செடியை வேரோடு பிடுங்கி, நீரில் நன்கு கழுவிவிட்டு, அதன் பூக்கள், இலைகள் மற்றும் வேர் பகுதியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 1 டம்ளர் அளவு வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி இறக்க வேண்டும்.
* பின் அது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அதை வடிகட்டி, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி வெறும் வயிற்று எடுக்கும் போது தான், அதன் ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்" என்று ஆயுர்வேத டாக்டர் கூறினார்.
எத்தனை நாட்கள் இந்த டீயைக் குடிக்கலாம்?
"சிறுநீரக கற்களை கரைக்க சிறுகண் பீளை டீயை குடிப்பதாக இருந்தால், தொடர்ந்து 14 நாட்கள் வரை குடிக்கலாம். அதற்கு மேல் குடிப்பதாக இருந்தால், தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின் எடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது" என்று டாக்டர் கூறினார்.
சிறுகண் பீளை டீயின் நன்மைகள்
* "சிறுகண் பீளை டீயானது சிறுநீரக கற்கள் பிரச்சனையால் சந்திக்கும் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி போன்ற தீவிர அறிகுறிகளை குறைப்பது மட்டுமல்லாமல், சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றையும் இயற்கையாக கரைத்து வெளியேற்ற உதவி புரியும். அதுவும் இந்த டீயை மூன்று மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், சிறுநீரக உறுப்பே ஆரோக்கியமாக செயல்படும்.
* இந்த டீ சிறுநீரக பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி, கல்லீரலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைப்பதன் மூலம், கொழுப்பு கல்லீரல், கல்லீரல் சிரோசிஸ், மஞ்சள் காமாலை போன்ற நோய் பாதிப்புக்களைக் குறைக்கும்.
* சிறுகண் பீளை டீ பெண்கள் சந்திக்கும் பிசிஓடி போன்ற கருப்பை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும். அதற்கு இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வரலாம். இதனால் பிசிஓடி அறிகுறிகளையும் குறைக்கும் மற்றும் மாதவிடாய் சுழற்சியையும் சீராக்கும். நீர்க்கட்டி கரையவும் பெரிதும் உதவி புரியும்.
* மேலும் கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் கால் வீக்கத்தைக் குறைக்கவும் இந்த சிறுகண் பீளை செடி உதவி புரியும். அதற்கு இதை டீயாக வைத்தும் குடிக்கலாம் அல்லது பார்லி கஞ்சி தயாரிக்கும் போது, அத்துடன் இதன் இலை, பூ மற்றும் வேரை சேர்த்து வேக வைத்து, பின் அதை நீக்கிவிட்டு, கஞ்சியை மட்டும் குடிக்கலாம். இதன் மூலம் கால் வீக்கம் நன்கு குறையும். அதுவும் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை குடிக்கலாம்.
* முக்கியமாக சிறுகண் பீளை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை சரிசெய்யவும் உதவி புரியும்" என்று ஆயுர்வேத டாக்டர் மைதிலி கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

