Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
Sun Ketu Conjunction in Leo 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இந்த சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சூரியனின் செல்வாக்கு பன்மடங்கு அதிகமாக இருக்கும். அதே வேளையில் இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் அதிர்ஷ்டம், வெற்றி, கௌரவம், எதிர்பார்த்த பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக இக்காலத்தில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இப்போது சிம்ம ராசியில் நிகழும் கேது-சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்கினால், அதில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் கேது-சூரியக் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக புதிய வருமான வழிகள் உருவாகலாம். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் கேது-சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். எடுத்த வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



