Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
World Kidney Day 2026: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஏனெனில் சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுப் பொருட்களை வடிகட்டுகின்றன, உடலில் திரவங்களை சமநிலைப்படுத்துகின்றன மற்றும் இரத்தத்தில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களை ஒழுங்குபடுத்துகின்றன.
இப்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அனைத்து பணிகளையும் சிறுநீரகங்கள் மேற்கொள்வதால், அந்த சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறந்த வழி சத்தான உணவுகளை உண்பது தான். அதுவும் குறிப்பிட்ட உணவுகளில் உள்ள சத்துக்கள் சிறுநீரகங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும், வடிகட்டும் செயல்முறையை ஆதரிக்கவும், சிறுநீர் மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இந்த சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், அதோடு தொடர்புடைய அபாயங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதத்தில் வரும் இரண்டாவது வியாழக்கிழமையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக சிறுநீரக தினம் மார்ச் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய டாப் 5 உணவுகள் குறித்து ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சேத்தி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
1. மூலிகைகள்
"மூலிகைகளான பேசில், பார்ஸ்லி, சிலென்ட்ரோ, தைம், கற்பூரவள்ளி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன மற்றும் இவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது" என்று டாக்டர் சேத்தி கூறினார். இப்படி ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகளானது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து சிறுநீரக திசு சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
2. பீட்ரூட்
"பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, சிறுநீரங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன" என்று டாக்டர் கூறினார். ஆயினும் இதில் ஆக்சலேட்டுகள் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. எனவே நாள்பட்ட சிறுநீரக நோயைக் கொண்டவர்கள் அல்லது சிறுநீரக கற்களைக் கொண்டவர்கள் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. ப்ளூபெர்ரி
"ப்ளூபெர்ரி பழங்களில் வைட்டமின்கள் அதிகமாகவும், பொட்டாசியம் குறைவாகவும் இருப்பதால், இவை சிறுநீரகங்களுக்கு நன்மை விளைவிக்கும்" என்று டாக்டர் கூறினார். அதோடு இந்த பழத்தில் பாஸ்பரஸ், சோடியம் போன்றவையும் குறைவு. குறிப்பாக இதில் உள்ள அந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரக செல்கள் சேமடைவதைத் தடுத்து பாதுகாக்கும். இந்த பழத்தை நாள்பட்ட சிறுநீரக நோய், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக கல் கொண்டவர்களும் சாப்பிடலாம்.
4. மக்காடமியா நட்ஸ்
"ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட மக்காடமியா நட்ஸில் பாஸ்பரஸ் குறைவாகவும், ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளன. எனவே இந்த நட்ஸை ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வந்தால், சிறுநீரக செயல்பாடு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்" என்று சேத்தி கூறினார்.
5. வைட்டமின் பி உணவுகள் மற்றும் பொட்டாசியம் குறைவான உணவுகள்
"முட்டையின் வெள்ளைக் கரு, தோல் நீக்கப்பட்ட சிக்கன், மீன், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கீரைகள், காலிஃப்ளவர் போன்ற பி வைட்டமின்கள் அதிகம் கொண்ட உணவுகளையும், பொட்டாசியம் குறைவான உணவுகளையும் உட்கொண்டு வந்தால், சிறுநீரகங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்" என்று டாக்டர் சேத்தி கூறினார்.
எனவே நண்பர்களே! உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மேலே டாக்டர் கூறிய உணவுகளை உங்களின் உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
